TN Budget 2026: பள்ளிக்கல்வி, உயர்கல்விக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு? - மாணவர்களுக்கு அரசு செய்தது என்ன? - பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்
தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித் துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை பார்க்கலாம்.

தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித் துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை பார்க்கலாம்.
இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.48,534 கோடியும் உயர்க்கல்வித்துறைக்கு ரூ.8505 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. 2026-27ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கீடு
இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். மேலும், 38 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாட்டில் இதுவரை 6,75,885 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கல்லூரி கனவு திட்டத்தில் இதுவரை 2 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
உயர்க்கல்வித்துறைக்கு ரூ.8505 கோடி நிதி ஒதுக்கீடு
உயர்க்கல்வித்துறைக்கு ரூ.8505 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் அறிவித்துள்ளார். உயர்க்கல்வி சேர்க்கை 47% அதிகரித்துள்ளதாகவும் உயர்க்கல்வியில் தேசிய சராசரியை விட 2 மடங்கு அதிகமாக தமிழ்நாட்டின் சராசரி உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், சிறப்பு திட்ட செயலாக்க துறைக்கு ரூ.17,088 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கோப்பை திட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு இதுவரை ரூ.101 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இளைஞர் நலன், விளையாட்டு துறைக்கு ரூ.718 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
புதுமைப் பெண் திட்டம்
மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தில் ரூ.6,85,296 மாணவிகள் பயன்பெற்றுள்ளனர். மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் 5,40,511 மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர் உயர்கல்வி திட்டம் - 383 மாணவர்கள் பயன்
அம்பேத்கர் உயர்கல்வி திட்டத்தின் கீழ் 285 ரூ.160 கோடியில் மாணவர்கள் வெளிநாடு சென்று படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், தகவல் தொழில்நுட்ப துறைக்கு ரூ.219 கோடி செய்யப்பட்டுள்ளதாகவும் திருச்சி, மதுரை, ஓசூரில் புதிய டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.























