Tamilan Prasanna vs Old Lady : ’’1000 ரூபாய் எதுக்கு? ’’மூதாட்டி vs தமிழன் பிரசன்னா
திமுக பொதுக்கூட்டத்தில் திமுக பேச்சாலர் தமிழன் பிரசன்னா மகளிர் உரிமைத்தொகை குறித்து பேசிய போது கூட்டத்தில் இருந்த மூதாட்டி ஒருவர் ஆயிரம் ரூபாய் ஆயிரம் ரூபாய் என்று சொல்லுகிறாயே ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சின்ன மூக்குத்தி கூட வாங்கி போட முடியாது இன்றைக்கு விலைவாசி எப்படி உள்ளது என்ன விலை விற்கிறது என கேள்வி எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த படவேடு பகுதியில் திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது..
இந்நிகழ்விற்கு போளூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.வி சேகர் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி சரவணன் மற்றும் தலைமை கழக பேச்சாளர் தமிழன் பிரசன்னா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினர்.
தலைமை கழக பேச்சாளர் தமிழன் பிரசன்னா பேசுகையில் : தமிழக அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகை குறித்து பாஜக அரசு தவறாக பேசுகிறது என பேசினார் அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு வயதான மூதாட்டி ஆயிரம் ரூபாய் ஆயிரம் ரூபாய் என்று சொல்லுகிறாயே ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சின்ன மூக்குத்தி கூட வாங்கி போட முடியாது இன்றைக்கு விலைவாசி எப்படி உள்ளது என்ன விலை விற்கிறது இன்றைய தேதிக்கு என்ன நிலவரம் என கூட்டத்தின் மத்தியிலேயே திடீரென சத்தமாக பேசி கேள்வி எழுப்பினார் அப்போது மேடையில் பேசிக் கொண்டிருந்த தமிழன் பிரசன்னாவிற்கும் அந்த மூதாட்டிக்கும் இடையில் விவாதம் நடைபெற்றது ஒரு கட்டத்தில் திமுக நிர்வாகிகள் அந்த பெண்மணியை அமைதியாக இருக்கும்படி கூறி கூட்டத்திலிருந்து வெளியேறச் செய்தனர்..
இதனால் அக்கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது குறிப்பிடத்தக்கது..





















