Kia Carens Clavis EV: இனி பேச்சே இல்லை.. கியாவின் 7 சீட்டர் மின்சார எஸ்யுவி அறிமுகம் , 490 கிமீ ரேஞ்ச்- கம்மி விலைக்கே..
Kia Carens Clavis EV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கியா நிறுவனம் தனது 7 சீட்டர் மின்சார எம்பிவி ஆன, காரென்ஸ் கிளாவிஸ் கார் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.

Kia Carens Clavis EV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கியா நிறுவனத்தால் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட முதல் மின்சார கார், காரென்ஸ் கிளாவிஸ் ஆகும்.
கியா காரென்ஸ் கிளாவிஸ் EV அறிமுகம்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கியா நிறுவனம், தனது காரென்ஸ் கிளாவிஸ் மின்சார கார் மாடலை அறிமுகபப்டுத்தியுள்ளது. இதன் விலை 17 லட்சத்து 99 ஆயிரத்தில் தொடங்கி, 24 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நிறுவனம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட இன்ஜின் அடிப்படையிலான எம்பிவி, தற்போது நேரடியாக மின்சார கார் மாடலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இந்த கார் முழுமையாக சார்ஜ் செய்தால் 490 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு சந்தையில் கியா ஏற்கனவே EV6 மற்றும் EV9 ஆகிய மின்சார கார் மாடல்களை விற்பனை செய்து வந்தாலும், நிறுவனம் சார்பில் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்ட முதல் மாஸ் மார்கெட் மின்சார கார் இதுவாகும்.
காரென்ஸ் கிளாவிஸ் EV - விலை விவரங்கள்
காரென்ஸ் கிளாவிஸ் மின்சார எடிஷனானது உள்நாட்டு சந்தையில் மொத்தம் 4 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.
| பேட்டரி பேக் | வேரியண்ட்கள் | விலை (அக்ஸ் - ஷோரூம்) |
| 42KWh | HTK Plus (7 சீட்டர்) | ரூ.17,99,000 |
| 42KWh | HTX (7 சீட்டர்) | ரூ.20,49,000 |
| 51.4KWh | ER HTX (7 சீட்டர்) | ரூ.22,49,000 |
| 51.4KWh | ER HTX Plus (7 சீட்டர்) | ரூ.24,49,000 |
உள்நாட்டு சந்தையில் காரென்ஸ் கிளாவிஸ் மின்சார எடிஷனானது, 17 லட்சத்து 99 ஆயிரம் தொடங்கி 24 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படும், BYD eMAX காரிடமிருந்து போட்டியை எதிர்கொள்கிறது.
காரென்ஸ் கிளாவிஸ் EV - பேட்டரி, ரேஞ்ச் விவரங்கள்
புதிய காரென்ஸ் கிளாவிஸ் கார் மாடலானது ஹுண்டயின் கிரேட்டா மின்சார எடிஷனுக்கு நெருக்கமாக காட்சியளிக்கிறது. இதில் இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி, 42KWh பேட்டரி ஆப்ஷன் ஆனது 404 கிலோ மீட்டர் ரேஞ்சும், 51.4KWh பேட்டரி பேக் ஆனது 490 கிலோ மீட்டர் ரேஞ்சும் அளிக்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஃப்ரண்ட் ஆக்சிலில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார் மூலம், 171bhp மற்றும் 255Nm ஆற்றல் உற்பத்தி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பூஜ்ஜியத்திலிருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை 8.4 விநாடிகளில் எட்டும் என கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. 4 நிலைகளிலான ரிஜெனரேடிவ் பிரேக்கிங், ஸ்டியரிங் காலமில் பொருத்தப்பட்ட ட்ரைவ் செலக்டர் ஆப்ஷன்களும் இடம்பெற்றுள்ளன.
காரென்ஸ் கிளாவிஸ் EV - வெளிப்புற அம்சங்கள்
உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் இன்ஜின் அடிப்படையிலான காரென்ஸ் கிளாவிஸிலிருந்து, மின்சார எடிஷன் பெரிய மாற்றங்கள் எதையும் பெறவில்லை. அதேநேரம், EV எடிஷன் என்பதற்கான சில தனித்துவமான டச்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, சற்றே திருத்தப்பட்ட பம்பர், அதோடு இந்த எம்பிவியின் சார்ஜிங் பாயிண்டானது வாகனத்தின் மூக்கு பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது.
LED DRLகளை இணைக்கும் மெல்லிய பேண்ட் இப்போது இங்கே ஒளிரச் செய்யப்பட்டுள்ளது. புதிய ஐஸ்-க்யூப் LED ஃபாக் விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன. ஏரோ-ஆப்டிமைஸ்ட் அலாய் வீல்கள் குறிப்பிடத்தக்க புதிய அம்சங்களாக இணைக்கப்பட்டுள்ளன. பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ள EV பேட்ஜைத் தவிர, இது பெரும்பாலும் வழக்கமான காரென்ஸை போலவே தோற்றம் கொண்டுள்ளது.
காரென்ஸ் கிளாவிஸ் EV - உட்புற அம்சங்கள்
உட்புறத்திலும், டேஷ்போர்டு வடிவமைப்பு ஒன்ஜின் அடிப்படையிலான காரென்ஸைப் போலவே உள்ளது. அதேநேரம், சென்டர் கன்சோல் பகுதி புதிய ஃப்ளோட்டிங் வடிவமைப்பைப் பெறுகிறது. இதன் மூலம் சேமிப்பிற்கு கூடுதல் இடம் கிடைக்கிறது. கியா அப்ஹோல்ஸ்டரிக்கு வெவ்வேறு வண்ணங்களைப் பயன்படுத்தியுள்ளது. இது 7 இருக்கைகள் கொண்ட எடிஷனுக்கு பிரத்தியேகமாகக் கிடைக்கிறது.
12.3 இன்ச் ஸ்க்ரீன்கள், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே & ஆண்ட்ராய்ட் ஆட்டோ, HVAC & மீடியா கண்ட்ரோலுக்காக மாற்றக்கூடிய டச் சென்சிடிவ் பேனல், 8 ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் போன் சார்ஜர், வெண்டிலேடட் ஃப்ரண்ட் சீட்ஸ், பவர்ட் ட்ரைவர் சீட்ஸ் உள்ளிட்ட அம்சங்கள் நிரம்பி வழிகின்றன.
காரென்ஸ் கிளாவிஸ் EV - பாதுகாப்பு அம்சங்கள்
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக காரென்ஸ் கிளாவிஸ் மின்சார எடிஷனில் 6 ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஏபிஎஸ், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், TPMS மற்றும் ஸ்டேண்டர்டாக நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் ஆகிய அம்சங்கள் வழங்கப்படுகின்றன. டாப் எண்ட் வேரியண்ட்களில் லெவல் 2 ADAS மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை டாப் எண்ட் வேரியண்ட்களில் வழங்கப்படுகிறது. பாதசாரிகள் பாதுகாப்பிற்காக விர்ட்சுவல் இன்ஜின் சவுண்ட் சிஸ்டமும் இடம்பெற்றுள்ளது.





















