மேலும் அறிய

High Court Order: சவுக்கு சங்கர் வழக்கு; உள்துறை செயலாளர், டிஜிபி, காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கில், தமிழ்நாடு உள்துறை செயலாளர், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அது என்ன தெரியுமா.?

யூடியூபர் சவுக்கு சங்கர், தன்னுடைய நிறுவனத்தின் செயல்பாட்டில் காவல்துறை தலையிடுவதாகக் கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கின் விசாரணையின்போது, சவுக்கு சங்கர் மீது நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகள், புலனாய்வு விசாரணை முடிவடைந்த வழக்குகள் குறித்த பட்டியலை தாக்கல் செய்யுமாறு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு உயர் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

சவுக்கு மீடியா நெட்வொர்க் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் செயல்பாட்டில் காவல்துறை தலையிடுவதாகக் கூறி, சவுக்கு சங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது பதில் அளிக்குமாறு, தமிழ்நாடு உள்துறை செயலாளர், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், அவர்கள் எதிர் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனுவில் சவுக்கு சங்கர் கூறியுள்ளது என்ன.?

சவுக்கு சங்கர் உயர்நிதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னை காவல் ஆணையர் அருண் தங்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறியுள்ளார்.

காவல்துறை அட்டூழியங்கள், முறைகேடுகள் உள்ளிட்ட பல விஷயங்களில் ஆணையர் அருண் நடவடிக்கை எடுக்காதது குறித்து தனது யூடியூப் சேனல் மூலம் வெளிச்சம் போட்டு காட்டியதால், பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு உட்படுத்துவதாக மனுவில் சவுக்கு சங்கர் குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் தங்களது குழுவினர் கும்பமேளா நிகழ்வை ஒளிப்பதிவு செய்ய உத்தரப்பிரதேசம் சென்றபோது, தெலங்கானா காவல்துறையினர் தங்களை வழிமறித்து, 2 மணி நேரம் விசாரணை என்ற பெயரில் தடுத்து வைத்ததுடன், மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாததால் 1000 ரூபாய் அபராதம் விதித்ததாகவும் கூறியுள்ள சவுக்கு சங்கர், சென்னை காவல்துறையின் அறிவுறுத்தலின் பேரிலேயே இத்தகைய தொல்லை தங்களுக்கு அளிக்கப்பட்டதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

“உள்துறை செயலாளரிடம் புகார்“

சென்னை காவல்துறையினர் தனது நடமாட்டத்தை கண்காணித்து துன்புறுத்துவது தொடர்பாக, உள்துறை செயலாளருக்கு உடனடியாக மின்னஞ்சல் மூலம் புகார் அனுப்பியதாக கூறியுள்ள சங்கர், மே மாதம், சிறிய குற்றங்களுக்காக தனது ஒளிப்பதிவாளர் மற்றும் காட்சி எடிட்டருக்கு சொந்தமான இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து, மே மாதமே உள்துறை செயலாளருக்கு இரண்டாவது புகார் அனுப்பியதாகவும், இதேபோல், ஜூன் மாதத்தில் டிஜிபி-க்கும் புகார் அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், தனது நிறுவனம் செயல்படுவதில் தலையிடுவதை தடுக்கவும், உள்துறை செயலாளர், டிஜிபி-க்கு உத்தரவிட என்றும் தனது மனுவில் சவுக்கு சங்கர் கோரிக்கை வைத்திருந்தார்.

உள்துறை சார்பில் பதில்

இந்த வழக்கின் விசாரணையின்போது, சவுக்கு சங்கர் அளித்த புகார்கள் 2013 சட்டத்தின் வரம்பிற்குள் கண்டிப்பாக வராது என்று உள்துறை செயலாளரின் சார்பில் ஆஜரான கூடுதல் அரசு வழக்கறிஞர் வாதிட்டார். அதோடு, 2 வாரங்களுக்குள் பதில் பிரமாணப் பத்திரம் மூலம் அனைத்து சமர்ப்பிப்புகளையும் எழுத்துப் பூர்வமாக தெரிவிப்பதாகவும் கூறினார்.

இதைத் தொடர்ந்து, யூடியூபர் சவுக்கு சங்கர் மீது உள்ள குற்றவியல் வழக்குகளின் பட்டியலை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர்நிதிமன்றம் உத்தரவிட்டது.

சவுக்கு சங்கர் தரப்பை விமர்சித்த நீதிபதி

முன்னதாக, இந்த வழக்கு விசாரணையின்போது சவுக்கு சங்கர் தரப்பை விமர்சித்த நீதிபதி, கிரிமினல் வழக்குகளில் பரபரப்புக்காக சிலர் இணைய ஊடகத்தில் விசாரணை நடத்துகிறார்கள் என்றும், வழக்க விசாரணை நீதிமன்றத்தில் நடக்கும்போதே, அதைப்பற்றி தனியாக அவர்களே விசாரணை, விவாதங்களை நடத்துகிறார்கள் என்றும் கூறினார்.

மேலும், அந்தந்த வழக்குகளின் முடிவுகளை பார்க்காமல், வழக்குகளை கையாள்வது குறித்து, காவலதுறைக்கும், நீதிபதிகளுக்கும் கட்டளையிட்டு, அறிவுரை சொல்லும் அளவிற்கு சிலர் செல்வதாகவும் நீதிபதி சாடினார்.

பத்திரிகையாளர்கள் அரசியலமைப்பின் 19-வது பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது என்றும், நாடடின் ஒவ்வொரு நிறுவத்தின் மீதும் ஆரம்பகட்ட விசாரணையின்போதே சேற்றை வாரி இறைக்கக் கூடாது என்றும் நீதிபதி கண்டிப்புடன் கூறினார்.

மேலும், அந்த சட்டப்பிரிவு ஒரு ஆயுதம் என்று தெரிவித்த நீதிபதி, நல்ல காரணங்களுக்காக அந்த ஆயுதத்தை எடுக்க வேண்டுமே தவிர, மிரட்டுவதற்காக எடுக்கக் கூடாது என்றும், அவ்வாறு சில பத்திரிகையாளர்கள் மக்களை மிரட்டுவது ஒரு கசப்பான உண்மை என்றும் நீதிபதி தெரிவித்தார். மேலும், அவ்வாறு செய்து, மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Gaza Israel Hamas: வீணாய் போன ட்ரம்ப்பின் முயற்சி; காசா மீது குண்டு மழை பொழிந்த இஸ்ரேல் - என்ன நடக்குது.?
வீணாய் போன ட்ரம்ப்பின் முயற்சி; காசா மீது குண்டு மழை பொழிந்த இஸ்ரேல் - என்ன நடக்குது.?
TN MRB Recruitment 2025: ரூ.72 ஆயிரம் ஊதியம், 1429 சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள்; உடனே விண்ணப்பிங்க- MRB அறிவிப்பு- முழு விவரம்
TN MRB Recruitment 2025: ரூ.72 ஆயிரம் ஊதியம், 1429 சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள்; உடனே விண்ணப்பிங்க- MRB அறிவிப்பு- முழு விவரம்
DGE Trust Exam 2025: ஊரக திறனாய்வு தேர்வு: 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை! விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது தெரியுமா?
DGE Trust Exam 2025: ஊரக திறனாய்வு தேர்வு: 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை! விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது தெரியுமா?
Ind vs Aus T20: ஃபார்மில் வரும் சூர்யா பசங்க.. அமைதிப்படை ஆஸி பசங்களுடன் மோதல்- இன்று துவங்கும் டி20 தொடர்
Ind vs Aus T20: ஃபார்மில் வரும் சூர்யா பசங்க.. அமைதிப்படை ஆஸி பசங்களுடன் மோதல்- இன்று துவங்கும் டி20 தொடர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சினிமாவுக்கு GOOD BYE ரஜினி திடீர் முடிவு! இதுதான் கடைசி படமா? | Rajini Retirement Kollywood
புயல் இப்படி தான் இருக்குமா? சூறாவளியை வீடியோ எடுத்த அமெரிக்கா ராணுவம்..! | Melissa Cyclone
திமுக கூட்டணிக்கு OPS தூது காதர்பாட்சாவுடன் 1Hour MEETING ஆபரேஷன் ராமநாதபுரம் | OPS Joins DMK
TVK Vijay Slams DMK | ”வீட்டுக்கு போவது உறுதி விவசாயிக்கு என்ன பண்ணீங்க” comeback கொடுத்த விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gaza Israel Hamas: வீணாய் போன ட்ரம்ப்பின் முயற்சி; காசா மீது குண்டு மழை பொழிந்த இஸ்ரேல் - என்ன நடக்குது.?
வீணாய் போன ட்ரம்ப்பின் முயற்சி; காசா மீது குண்டு மழை பொழிந்த இஸ்ரேல் - என்ன நடக்குது.?
TN MRB Recruitment 2025: ரூ.72 ஆயிரம் ஊதியம், 1429 சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள்; உடனே விண்ணப்பிங்க- MRB அறிவிப்பு- முழு விவரம்
TN MRB Recruitment 2025: ரூ.72 ஆயிரம் ஊதியம், 1429 சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள்; உடனே விண்ணப்பிங்க- MRB அறிவிப்பு- முழு விவரம்
DGE Trust Exam 2025: ஊரக திறனாய்வு தேர்வு: 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை! விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது தெரியுமா?
DGE Trust Exam 2025: ஊரக திறனாய்வு தேர்வு: 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை! விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது தெரியுமா?
Ind vs Aus T20: ஃபார்மில் வரும் சூர்யா பசங்க.. அமைதிப்படை ஆஸி பசங்களுடன் மோதல்- இன்று துவங்கும் டி20 தொடர்
Ind vs Aus T20: ஃபார்மில் வரும் சூர்யா பசங்க.. அமைதிப்படை ஆஸி பசங்களுடன் மோதல்- இன்று துவங்கும் டி20 தொடர்
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
'MONTHA' Cyclone: யப்பா, என்னா வேகம்.! 110 கி.மீ குறைக்காற்றுடன் ஆந்திராவில் கரையை கடந்த ‘மோன்தா‘ புயல்
யப்பா, என்னா வேகம்.! 110 கி.மீ குறைக்காற்றுடன் ஆந்திராவில் கரையை கடந்த ‘மோன்தா‘ புயல்
Chennai Power Cut: சென்னையில அக்டோபர் 30-ம் தேதி எந்தெந்த இடங்கள்ல மின்சார துண்டிப்பு செய்யப் போறாங்க தெரியுமா.?
சென்னையில அக்டோபர் 30-ம் தேதி எந்தெந்த இடங்கள்ல மின்சார துண்டிப்பு செய்யப் போறாங்க தெரியுமா.?
Gold Rate Oct. 29th: சந்தோஷத்தில் மண்ணை போட்ட பொன்; மீண்டும் உயர்ந்த தங்கம் விலை - இன்று எவ்வளவு தெரியுமா.?
சந்தோஷத்தில் மண்ணை போட்ட பொன்; மீண்டும் உயர்ந்த தங்கம் விலை - இன்று எவ்வளவு தெரியுமா.?
Embed widget