மேலும் அறிய
Top 10 News Headlines: உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடக்கம், சரோஜா தேவி உடல் இன்று நல்லடக்கம், ரஷ்யாவுக்கு ட்ரம்ப் கெடு - 11 மணி செய்திகள்
Top 10 News Headlines Today July 15: இந்தியா முழுவதிலும் இன்று காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.

11 மணி தலைப்புச் செய்திகள்
Source : ABP
- அரசு சேவைகள் வீடுதேடி வர “உங்களுடன் ஸ்டாலின்“ புதிய திட்டத்தை, சிதம்பரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
- அதிமுக ஆட்சி இருண்ட ஆட்சியா என கேள்வி எழுப்பியுள்ள எடப்பாடி பழனிசாமி, யார் என்ன சாதனை செய்தோம் என விவாதிக்கத் தயாரா என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார்.
- காஷ்மீரில் அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா நடத்தப்பட்ட விதத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம். தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை மாநில உரிமைகள் பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டு.
- பள்ளி வளாகங்களை தவறாக பயன்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- திமுக கூட்டணி சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்வான மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன், வரும் 25-ம் தேதி நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ள உள்ளதாக மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
- மறைந்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவியின் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்திவரும் நிலையில், இன்று கர்நாடகத்தில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
- குரூப் 2, 2ஏ பணிகளுக்கு செப்டம்பர் 28-ல் முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- 50 நாட்களில் உக்ரைனுடன் போர் நிறுத்தம் செய்யாவிட்டால், 100 சதவீத வரி விதிக்கப்படும் என ரஷ்யாவிற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கெடு விதித்துள்ளார்.
- மடகாஸ்கரில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொல்ல முயன்றவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கம் செய்ய அதிரடியாக உத்தரவிட்ட நீதிமன்றம் அவருக்கு கடுமையான வேலைகளுடன் ஆயுள் தண்டனையும் விதித்தது.
- ட்ரம்ப் நிர்வாகத்திலிருந்து எலான் மஸ்க்கின் வெளியேறிய நிலையில், அவரது எக்ஸ், ஏஐ நிறுவனத்துடன் அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பெண்டகன் ஒப்பந்தம் செய்துள்ளது.
- விண்வெளியிலிருந்து இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்டோர் பூமிக்கு புறப்பட்ட நிலையில், இன்ற பிற்பகலில் அவர்களை அழைத்து வரும் டிராகன் விண்கலம் பூமியை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















