Amudha IAS transfer : "அமுதாவையே மாத்திட்டேன்" அதிகாரிகளுக்கு WARNING! சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்!
அடுத்தடுத்த கொலைகள், கள்ளச்சாராய மரணம் என தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து எதிர்கட்சிகள், திமுகவை பந்தாடி வரும் நிலையில் அமுதா ஐஏஎஸ்-ஐ அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.. இந்நிலையில் ஸ்டாலினின் இந்த முடிவின் பிண்ணனியில் முக்கியமான சில ஐபிஎஸ் ஆபிசர்களும் இருப்பதாக தெரிகிறது..
களப்பணிக்கு பெயர் போன ஆபிஸர் தான் அமுதா ஐஏஎஸ். இவரை மத்திய ஆட்சி பணியில் இருந்து ஸ்பெஷலாக இங்கே வரவழைத்தார் ஸ்டாலின். வந்த சில காலங்களிலேயே அவருக்கு உள்துறை செயலாளர் என்ற தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலினின் நேரடி கண்ட்ரோலில் வரும் முக்கியமான பொறுப்பு வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பாக எங்கு எது நடந்தாலும் சரி, தமிழ்நாட்டின் டிஜிபி யே நேரடியாக ரிப்போர்ட் செய்வது உள்துறை செயலாளரிடம் தான். மேலும் ஐபிஎஸ் டிரான்ஸ்பரையும் உள்துறை செயலாளர் தான் பிறப்பிப்பார். அந்த அளவு பவர்ப்புள்ளான போஸ்டிங் அது.
அப்படிப்பட்ட போஸ்டிங்கில் இருந்து தான் தற்போது அமுதா ஐஏஎஸ் மாற்றப்பட்டுள்ளார். அதற்கு காரணமாக மக்களவைத் தேர்தலில் வெற்றி என்ற இனிப்பான செய்திக்கு பிறகு, தொடர்ந்து பல கசப்பான சம்பவங்களை சந்தித்து வருகிறது திமுக.
இதனால் தேர்தல் வெற்றியை கொஞ்சம் கூட கொண்டாட விட மாட்டிங்க போலற்கே என அப்செட்டில் இருக்கிறாராம் ஸ்டாலின்.
குறிப்பாக கள்ளக்குறிச்சி விஷ சாராயர மரணம் குறித்து செய்தி வெடித்து விஸ்வரூபம் எடுத்தது, அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுகவுக்கு குடைச்சல் கொடுத்தன. இவ்வளவு ஏன் கூட்டணி கட்சியான விசிகவின் திருமாவளவனே முன்னின்று ஒரு போராட்டத்தை நடத்தினார்.
அப்போதே உங்கள தானே நம்பினேன், இப்படி கோட்டை விட்டுடீங்களே என அமுதா ஐஏஎஸ் மீது ஸ்டாலின் அப்செட்டாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த சம்பவம் அடங்குவதற்குள், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங்க் படுகொலை செய்யப்பட்டார். அதிமுக, பாஜக மட்டுமின்றி தேசிய கட்சி தலைவரான மாயாவதி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என விமர்சிக்கும் நிலை உண்டானது. இந்நிலையில் மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவர் இன்று வெட்ட வெளியில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அதனால் ஏற்கனவே ஹிட் லிஸ்டில் இருந்த அமுதா ஐஏஎஸ், உள்துறை செயலாளர் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளராக பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலினின் கீழ் வரும் உள்துறையின் செயலாளராக இருக்கும் அமுதா ஐஏஎஸ் இன் கீழ்தான் சட்டம் ஒழுங்கு மற்றும் மதுவிலக்கு அமலாக்கம் ஆகியவை வருகின்றன. இந்நிலையில் இது இரண்டிலுமே கோட்டை விட்டுவிட்டாரே அமுதா ஐஏஎஸ் என்று ஆதங்கப்பட்டுள்ளார் ஸ்டாலின்.
மேலும் ஐபிஎஸ் அதிகாரிகளின் தரப்பில் கள்ளக்குறிச்சி, மரக்காணம் ஆகிய இரண்டு கள்ளச்சாராய மரணத்திலும் அதிக நடவடிக்கைகள் தங்கள் பக்கமே பாய்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை அருந்தி உயிரிழந்த விவகாரத்தில் எஸ் பி சமய் சிங் மீனா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மேலும் டிஎஸ்பி இன்ஸ்பெக்டர் எஸ்ஐஎ சட்டம் ஒழுங்கை சேர்ந்த 9 காவல்துறையினர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள்.
மெத்தனால் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அதை ஆய்வு செய்ய வேண்டிய பொறுப்பு கலெக்டர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிகளுக்கே இருக்கும்போது, கலெக்டர் மாற்றப்பட்டார். ஆனால் அவர் உட்பட தாசில்தார் விஏஓ போன்ற வருவாய் துறை அதிகாரிகள் வரை யார் மீதும் நடவடிக்கை பாய வில்லை.
அடுத்ததாக ஆம்ஸ்ட்ராங் கொலையை தொடர்ந்து சென்னை கமிஷ்னர் சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டார்
அன்றாடம் நடக்கும் குற்ற சம்பவங்களை கண்காணிப்பது பொது நிகழ்வுகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தலைவர்களின் பாதுகாப்பு என ஏகப்பட்ட பிரச்சனைகளை சட்டஒழுங்கு போலீசார் சமாளிக்கும் சூழலில், எல்லாதிற்கும் அவர்களையே பொறுப்பாக்கினாள் எப்படி என்று டிஜிபி சங்கர் ஜிவாலிடம் சில மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் குமுறி உள்ளனர்.
இந்நிலையில் தான் இந்த விவகாரம் ஸ்டாலின் காதுகளுக்கு செல்ல, நடவடிக்கை என்று வந்துவிட்டால், ஐஏஎஸ், ஐபிஎஸ் என தனித்தனி ஸ்கேல் எல்லாம் கிடையாது, அனைவரும் சமம் தான் என்று சொல்லும் வகையில் அமுதா ஐஏஎஸ்-ஐ மாற்றிவிட்டு, புதிய உள்துறை செயலாளராக தீரஜ் குமார் ஐஏஎஸ்-ஐ நியமித்துள்ளார் ஸ்டாலின்