Sports Awards:தமிழக வீராங்கனை வைஷாலி, கிரிக்கெட் வீரர் ஷமிக்கு அர்ஜுனா விருது - குடியரசு தலைவர் வழங்கி கவுரவித்தார்
Arjuna Awards: இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான அர்ஜுனா விருதுகளை, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.
Sports Awards: இந்திய விளையாட்டு வீரர்களுக்கு அறிவிக்கப்பட்ட பல்வேறு விருதுகளை, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டரான வைஷாலிக்கு, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அர்ஜுனா விருது வழங்கி கவுரவித்தார்.
#WATCH | Delhi: Mohammed Shami received the Arjuna Award from President Droupadi Murmu at the National Sports Awards. pic.twitter.com/znIqdjf0qS
— ANI (@ANI) January 9, 2024
#WATCH | Delhi: Ojas Pravin Deotale received the Arjuna Award from President Droupadi Murmu at the National Sports Awards. pic.twitter.com/o8kj1t2pRv
— ANI (@ANI) January 9, 2024
#WATCH | Delhi: Para-archer Sheetal Devi received the Arjuna Award from President Droupadi Murmu at the National Sports Awards. pic.twitter.com/jwkFEd2CjH
— ANI (@ANI) January 9, 2024
இதேபோன்று, இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, வில் வித்தை வீரரான ஓஜாஸ் பிரவீன் தியோதலே, பாரா வில்வித்தை வீராங்கனையான சீதல் தேவிக்கும், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அர்ஜுனா விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
அர்ஜுனா விருதுகள்:
இந்திய விளையாட்டு துறையில் சாதனை படைக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் அர்ஜுனா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது. அந்த வகையில் ஆண்டுக்கான விருதுக்கு தகுதியான வீரர், வீராங்கனைகளின் பெயர்களை ஒவ்வொரு விளையாட்டு சங்கங்களும் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்திருந்தன. அதன் முடிவில் தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட்மாஸ்டரான ஆர்.வைஷாலி உள்பட 26 பேருக்கு அர்ஜுனா விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு குடியரசு தலைவர் இன்று அர்ஜுனா விருதுகளை வழங்கி கவுரவித்தார்.