IND Vs Pak Asia Cup: ”காசு பார்க்க துடிக்கும் பிசிசிஐ” அப்பாவை கொன்ற பாகிஸ்தானின் விளையாட்டை மகன் பார்க்க வேண்டுமா?
IND Vs Pak Asia Cup: ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா களமிறங்குவதற்கு, ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

IND Vs Pak Asia Cup: இந்தியர்களை கொன்ற பாகிஸ்தானுடன் பணத்திற்காக பிசிசிஐ போட்டி நடத்துவதாக சாடி வருகின்றனர்.
இந்தியா - பாகிஸ்தான் போட்டி:
பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் விதமாக, பாகிஸ்தான் எல்லையில் இருந்த தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனால் இருநாடுகளுக்கு இடையே பரபரப்பான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட இந்திய வீரர்கள் மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தான், ஆசிய கோப்பை போட்டிக்கான அட்டவணை அண்மையில் வெளியிடப்பட்டது. அதன்படி, செப்டம்பர் 14ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முடிவு வெளியானது முதலே, பாகிஸ்தான் உடன் இந்திய அணி விளையாட கூடாது என ரசிகர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அப்பாவை இழந்த மகன் கிரிக்கெட் பார்க்க வேண்டுமா?
ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தின் போது நாடாளுமன்றத்தில் பேசிய ஓவைசி, “ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடூரமான தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் போட்டியை விளையாட வைக்கும் தார்மீக நிலைப்பாடு அரசாங்கத்திற்கு உள்ளதா. “பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களின் குடும்ப உறுப்பினர்களை பாகிஸ்தானுடனான இந்தியாவின் கிரிக்கெட் போட்டியைப் பார்க்கச் சொல்ல உங்கள் மனசாட்சி அனுமதிக்கிறதா? தண்ணீரும் ரத்தமும் ஒன்றாகப் பாயாது என்று கூறி, பாகிஸ்தானுக்கான 80% தண்ணீரை நாங்கள் நிறுத்துகிறோம். ஆனால், நீங்கள் கிரிக்கெட் போட்டி விளையாடுவீர்களா? அந்த போட்டியைப் பார்க்க என் மனசாட்சி என்னை அனுமதிக்கவில்லை. இறந்த 25 பேரை அழைத்து, ஆபரேஷன் சிந்தூரில் நாங்கள் பழிவாங்கிவிட்டோம் என்று சொல்ல இந்த அரசாங்கத்திற்கு தைரியம் இருக்கிறதா? இப்போது நீங்கள் பாகிஸ்தானுடன் போட்டியைப் பார்க்கிறீர்கள். இது மிகவும் வருத்தமளிக்கும் விஷயம்” என காட்டாமாக பேசியுள்ளார்.
காசு பார்க்க துடிக்கும் பிசிசிஐ:
இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியர்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தியதாக கூறி, முன்னாள் வீரர்களே பாகிஸ்தான் உடனான WCL போட்டியில் விளையாட மறுத்துவிட்டார்கள். ஆனால், ஆசியகோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட பிசிசிஐ முடிவு செய்துள்ளது. காரணம் WCL போட்டியில் சிறிய வருமானம் மட்டுமே கிடைக்கும். ஆனால், ஆசிய கோப்பை போட்டியில் வருமானம் அதிகம். இந்திய மக்கள் கொல்லப்பட்டு 26 குடும்பங்கள் தங்களது உறவுகளை இழந்து வாடி வருந்திக்கொண்டுள்ளது. ஆனால், பணம் மட்டுமே முக்கியம் என பிசிசிஐ செயல்படுகிறது. மக்களின் உணர்ச்சிகளை பணமாக மாற்ற தீவிரம் காட்டுகிறது” என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
கங்குலி மீது அட்டாக்
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி குறித்து பேசிய முன்னாள் கேப்டன் கங்குலி, “பஹல்காம் போன்ற தாக்குதல்கள் இனி நடக்கக் கூடாது. ஆனால், போட்டிகள் கண்டிப்பாக தொடர வேண்டும்” என வலியுறுத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, “திருமணமாகி சில நாட்களே ஆன நிலையில், தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட கணவருக்கு அருகில் இடிந்துபோய் அமர்ந்திருந்த பெண்ணை மறந்துவிட்டீர்களா? தாக்குதலில் தனிப்பட்ட முறையில் நீங்கள் இழப்பைச் சந்தித்து இருந்தால் இப்படி தான் பேசுவீர்களா?” என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதேபோன்று ஏராளமானோர் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆதரவாளர்கள் சொல்வது என்ன?
ஒரு சிலர் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டிக்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். விளையாட்டு என்பது விறுப்பு, வெறுப்புகளை கடந்து வீரர்களிடையே மட்டுமின்றி, இருநாடுகளுக்கு இடையேயும் நட்பையும், சகோதரத்துவத்தையும் ஊக்குவிக்கும். இருநாடுகளும் மோதல் போக்கை கைவிடுத்து, ஒன்றாக சேர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதற்கான முதல் படியாக விளையாட்டு இருக்கலாம் என வலியுறுத்தி வருகின்றனர்.
Do you think, by playing cricket with Pakistan, BCCI is giving a tribute to the victims of the Pahalgam attack ?#boycottindvspak#AsiaCup #indvspak pic.twitter.com/NDizD9vVF5
— Apurv Mungra 🇮🇳 (@Apurv14696) July 27, 2025
this Asia Cup is compromise with National Pride !
— Cricket Dhamaal (@DhamaalD7) July 27, 2025
Shame On BCCI 😡#BoycottAsiaCup #IndVsPak #AsiaCup2025 #AsiaCup pic.twitter.com/QwWS3iCetf
Money over Patriotism❗️This is what the #BCCI apparently did to Indians and the Indian Army.#AsiaCup2025 #INDvsPAK #AsiaCup pic.twitter.com/Y5BtwoLNdX
— Siju Moothedath (@SijuMoothedath) July 27, 2025




















