மேலும் அறிய

Chennai Police Order: இரவு நேர குற்றத் தடுப்பு; காவலர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு - என்ன பண்ணப் போறாங்க தெரியுமா.?

சென்னையில் இரவு நேர பணியில் ஈடுபடும் சட்டம் ஒழுங்கு போலீசார், குற்றங்களை தடுக்கும் வகையில் வாகன தணிக்கையில் ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

சென்னையில், இரவு நேரப் பணியில் ஈடுபடும் போலீசார், இரவு 10 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை சட்டம் ஒழுங்கு போலீசார் குற்றங்களை தடுக்கும் வகையில் வாகனத் தணிக்கையில் ஈடுபடுவது, போஸ்டர் ஒட்டுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அது குறித்து தற்போது பார்க்கலாம்.

சென்னை மாநகரக் காவல்துறையின் அறிக்கை

இரவு நேரங்களில் பணிபுரியும் காவலர்களுக்கு, சென்னை மாநகரக் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படாத வகையில், வாகனத் தணிக்கை நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், ரோந்து வாகன போலீசார், போஸ்டர் ஒட்டுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஒட்டப்படும் போஸ்டர்களுக்கு அந்தப் பகுதி இரவு நேர போலீசார்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அண்ணா சாலை, கடற்கரை காமராஜர் சாலை உள்ளிட்ட எந்த சாலைகளிலும், பைக் ரேஸ் நடத்தக் கூடாது. பைக் ரேஸில் ஈடுபட்டு தப்பிப்போரை, அடுத்த செக் பாயிண்ட்டில் தகவல் தெரிவித்து பிடித்து வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இரவு 10 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை, சட்டம் ஒழுங்கு போலீசார் குற்றங்களை தடுக்கும் விதமாக வாகன தணிக்கையில் ஈடுபட வேண்டும் எனவும், அவசர அழைப்புகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதுவும் நடக்கவில்லை என்ற மழுப்பல் பதில் கூறக் கூடாது என்றும் புகார்தாரர்களிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி முடிக்காமல், சம்பவ இடத்திற்கு கட்டாயம் செல்ல வேண்டும் என்றும் காவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல், அதிகாலை 2 - 4 மணிக்கு, வங்கிகள், ஏடிஎம்-களில் உள்ள காவலர்கள் தூங்கிவிடுவார்கள் என்பதால், அவர்களை அலெர்ட் செய்ய வேண்டும் எனவும், இரவுப் பணியில் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையும் காவலன் செயலியில் பதிவேற்ற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு ஏரியாக்களிலும் 2 தங்கும் விடுதிகளில் திடீர் சோதனை நடத்த வேண்டும் என்றும், 2 பேர் தங்கும் அறையில் கூடுதல் நபர்கள் தங்கியிருந்தால், அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போதிய ஓய்வுக்குப் பிறகுதான் இரவுப் பணி வழங்கப்படுவதால், இரவுப் பணியில் ஓய்வு எடுக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் எந்த காவல் நிலையத்திலும் குற்றவாளிகளை வைத்திருக்கக் கூடாது என்றும் வாகன தணிக்கையைப் பார்த்து யாரும் வேகமாக வாகனங்களை இயக்கி தப்பிச் செல்வோரை விரட்டிப் பிடிக்காமல், அடுத்த செக் பாயிண்ட்டுக்கு தகவல் அளித்து அவர்களை பிடிக்க வேண்டும் என்று சென்னை மாநகரக் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

 

 

தலைப்பு செய்திகள்

TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Kilambakkam Railway Station Update: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? ரயில்வே நிர்வாகம் கொடுத்த அதிகாரப்பூர்வ சர்ப்ரைஸ்!
Kilambakkam Railway Station Update: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? ரயில்வே நிர்வாகம் கொடுத்த அதிகாரப்பூர்வ சர்ப்ரைஸ்!
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!
வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Embed widget