Honey Rose: ஹனிரோஸ் ஒரு திருநங்கை.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்த பயில்வான் ரங்கநாதன்!
பிரபல மலையாள நடிகை ஹனிரோஸ் பெண் இல்லை என்றும், அவர் ஒரு திருநங்கை என்றும் பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள திரையுலகின் நடிகைகளில் ஒருவர் ஹனிரோஸ். தமிழில் முதல்கனவே படம் மூலமாக நடிகராக அறிமுகமான இவர் தமிழில் சிங்கம்புலி, கந்தர்வன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஏராளமான தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இவர் பற்றி பிரபல நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் கூறிய கருத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹனிரோஸ் நடிகையா? நடிகரா?
சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், "ஹனிரோஸ் நடிகையா? நடிகரா? உங்க பார்வையில் நடிகைனு வச்சுக்கோங்க. ஹனிரோஸின் அழகை பில்டப் பண்ணிட்டாங்க. அது நெகட்டிவ் பப்ளிசிட்டியா இருந்தாலும் அது பாப்புலர் ஆகிவிட்டது. அதுனாலதான் விழாக்களுக்கு கூப்பிட்றாங்க.
கேரளாவுல லேட்டஸ்ட் நியூஸ் ஹனிரோசை அவதூறாக பேசிய யூடிபர் கைதுங்குற செய்திதான். பாபி செம்மனூர் இன்னும் ஜெயில்லதான் இருக்காரு. ஹனிரோசுக்கு தமிழ் சினிமாவுல நல்ல தொடக்கம் இருந்துச்சு. அதை அவங்க பயன்படுத்திக்கல. நான் ஷுட்டிங் வரமாட்டேனு ரகளை பண்ணிட்டாங்க. ஒத்துழைக்காததால தமிழ் பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தயங்குனாங்க. சிம்ரன், நயன்தாரா எல்லாம் நடிச்சு, கவர்ச்சி காட்டி மேல வந்துருக்காங்க.

ஹனிரோஸ் திருநங்கை:
ஹனிரோஸ் ஒரு வித்தியாசமான திருநங்கை. பொதுவா திருநங்கைகளை அவங்க வீட்டில் இருந்து ஒதுக்கிவிடுவாங்க. ஆனா அவங்க குடும்பத்துல சேத்துகிட்டாங்க. அவங்க மூலமாக வருமானம் வருது. நல்லா தெரியும் ஹனிரோஸ் திருநங்கை. அதை அவங்களே ஒத்துக்கிட்டாங்க. பேட்டியிலும் சொல்லிருக்காங்க."
இவ்வாறு அவர் பேசினார்.
பயில்வான் ரங்கநாதன் ஹனிரோஸ் பற்றி பகிர்ந்த தகவல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பயில்வான் ரங்கநாதன் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்து வருவது வழக்கமாக வைத்துள்ளார். அவர் தற்போது ஹனிரோசை திருநங்கை என்று கூறியிருப்பது இணையத்தை அதிரவைத்துள்ளது. ஆனால், அவர் பெண் என்பதே உண்மை. 1991ம் ஆண்டு கேரளாவின் மூலாமட்டுமில் ஹனிரோஸ் பிறந்தார்.
2005ம் ஆண்டு பாய்பிரண்ட் என்ற படம் மூலமாக அறிமுகமானவர், அதன்பின்பு கன்னடம், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்தார். ஜெயசூர்யா, பகத் பாசில், ஜீவா, மோகன்லால், ஸ்ரீகாந்த், பாலய்யா என பல பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார். தமிழில் சிங்கம்புலி படத்தில் நடித்த இவருக்கு ஓரளவு வரவேற்பு இருந்தது. இவர் தொடர்ந்து படங்களில் ஒப்பந்தம் ஆகி வந்தாலும் கடை திறப்பு விழா மூலமாகவே ஏராளமான வருவாயை ஈட்டி வருகிறார்.
கேரளாவில் தற்போது திறக்கப்படும் நகைக்கடைகள், புத்தாடை கடைகளை திறந்து வைக்கும் சிறப்பு விருந்தினராக ஹனிரோசே இருக்கிறார். ஹனி ரோஸ் தற்போது ரேச்சல் என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இவர் செம்மனூர் நகைக்கடை உரிமையாளர் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அளித்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





















