Sania Mirza : மகளிர் கிரிக்கெட் அணி: பெங்களூரு அணிக்கு ஆலோசகரானார் சானியா மிர்ஸா..
Sania Mirza : பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மகளிர் கிரிக்கெட் அணிக்கு டென்னிஸ் பிரபலம் சானியா மிர்சா நியமிக்கப்பட்டுள்ளார்.
மகளிர் பிரீமியர் லீக் (Women's Premier League) கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஆலோசகராக டென்னிஸ் ஜாம்பவான் சானியா மிர்சா நியமிக்கபப்ட்டுள்ளார்.
இது தொடர்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத் துறையில் இந்தியாவின் முகமாக திகழும் சானியா மிர்சா தன் திறமையினால் பல சாதனைகளைப் புரிந்துள்ளார். விளையாட்டுப் போட்டிகளின் பெண்களின் பங்களிப்பிற்கு முன்னோடியாக விளங்குபவர்.
பெங்களூரு அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து கூறுகையில், “20 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாட்டுத் துறையில் இருக்கிறேன் என்பது என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. விளையாட்டுத் துறை இளம் பெண்களுக்கானது என்பதை எல்லோரிடமும் சொல்வதை கடமையாக நினைக்கிறேன். நெருக்கடிகளை சமாளிக்க கற்றுக்கொள்வது கொண்டாலே போதும்.” என்று குறிப்பிட்டுள்ளார்,
சானியா வென்ற பட்டங்கள்
சானியா 2009 ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் 2012 பிரெஞ்ச் ஓபனில் மகேஷ் பூபதியுடன் கலப்பு இரட்டையர் பட்டங்களையும், 2014 யுஎஸ் ஓபனை பிரேசிலின் புருனோ சோரஸுடனும் வென்றார். அவர் பெண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பட்டம் பெற்றுள்ள நிலையில், ஆஸ்திரேலிய ஓபனில் நான்கு முறை இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. "இது 2005 இல் நான் 18 வயதில் மூன்றாவது சுற்றில் செரீனா வில்லியம்ஸுடன் விளையாடியபோது தொடங்கியது, அது 18 ஆண்டுகளுக்கு முன்பு போதுமானதாக இருந்தது", என்று கூறினார்.
மகளிர் ஐ.பி.எல். போட்டிகள்
இந்தியாவில் ஐ.பி.எல். போட்டிகளை பார்ப்பதற்கு என்றே கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஆண்களுக்கு மட்டுமே நடத்தப்பட்டு வந்த ஐ.பி.எல். போட்டிகளை பெண்களுக்கும் நடத்த வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வந்தது. இதையடுத்து,இந்தாண்டு முதல் மகளிர் ஐ.பி.எல். தொடர் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது.
மும்பையில் நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் ஏலம் முடிந்த பிறகு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மகளிர் பிரீமியர் லீக் 2023க்கான அட்டவணையை அறிவித்தது. அதன்படி, மகளிர் பிரீமியர் லீக் முதல் சீசனில் மொத்தம் 20 லீக் போட்டிகளும், 2 ப்ளேஆஃப் போட்டிகளையும், 23 நாட்களுக்குள் நடத்த திட்டமிட்டுள்ளது.
மேலும், மோதலுடன் டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் மார்ச் 4 ஆம் தேதி குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையேயான லீக் போட்டியுடன் முதல் சீசன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 4ம் தேதி தொடங்கும் முதல் போட்டி மட்டும் மாலை 3.30 மணிக்கு என்றும், மற்ற போட்டிகள் அனைத்து இரவு 7.30 மணிக்கு தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
5 அணிகள்:
ஏற்கனவே இந்த தொடருக்கான ஒளிபரப்பு உரிமை வியாகாம் நிறுவனம் 951 கோடிக்கு கைப்பற்றியுள்ளது. அதாவது 2023 முதல் 2027 வரை காலகட்டத்திற்கு இந்த ஒளிபரப்பு உரிமம் அடங்கும். மகளிர் ஐ,பி.எல். ஏலத்தில் பங்கேற்க உள்ள அணிகளை அதானி குழுமம், இந்தியாவின் குழுமம், ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் குழுமம், ஜே.எஸ்.டபுள்யூ ஜி.எம்.ஆர். கிரிக்கெட் குழுமம், கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் குழுமம் வாங்கியுள்ளனர்.
இனி வரும் காலங்களில் இந்த 5 அணிகள் என்பது அதிகரிக்கப்பட வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. இப்போது முதல் ஏலத்தில் பங்கேற்க உள்ள அணிகள் தங்களது அணியை பலப்படுத்தும் முயற்சியில் களமிறங்கியுள்ளன. மும்பை அணி டி20 மற்றும் உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து முன்னாள் கேப்டன் எட்வர்ட்சை பயிற்சியாளராக நியமித்துள்ளது. இந்தியாவின் அசத்தல் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மகளிர் பிரிமியர் லீக்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விவரம் :
ஸ்மிருதி மந்தனா, சோஃபி டிவைன், எலிஸ் பெர்ரி, ரேணுகா சிங், ரிச்சா கோஷ், இந்திராணி ராய், திஷா கசத், ஸ்ரேயங்கா பாட்டீல், கனிகா அஹுஜா, ஆஷா ஷோபனா, எரின் பர்ன்ஸ், ஹீதர் நைட், டேன் வான் நீகெர்க், ப்ரீத்தி போஸ், பூனம் கெம்னர், மீ ஜென்சன், ஷட், சஹானா பவார்
ஆஸ்திரேலியாவின் பென் சாயர் அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பார் என்பதை அணி நிர்வாகம் உறுதி செய்துள்ளது. சாயர் தற்போது நியூசிலாந்து மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். கடந்த ஆண்டு மகளிர் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியின் உதவி பயிற்சியாளராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் முன்னாள் ஆஃப் ஸ்பின்னர் மலோலன் ரங்கராஜன் உதவிப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீராங்கனை வீ.ஆர். வனிதா அவர்களின் பீல்டிங் பயிற்சியாளர்.