Virat Kohli: அந்த ஒரு இன்னிங்ஸ்.. அதனால தான் அவரு கிங்! கோலியை புகழ்ந்த அப்ரிடி
விராட் கோலி போன்ற ஒருவரால் தான் அது போன்ற இன்னிங்ஸை விளையாட முடியும் என்று ஷாஹீன் ஷா அப்ரிடி கூறியுள்ளார்.
தான் பார்த்ததிலேயே மிகச்சிறந்து இன்னிங்ஸ் 2022ஆம் ஆண்டு விராட் கோலி விளையாடியது தான் என்று ஷாஹீன் ஷா அப்ரிடி கூறியுள்ளார்.
மகத்தான வீரர் விராட் கோலி:
இது தொடர்பாக அவர் பேசுகையில், "விராட் கோலி மகத்தான வீரர். விராட் கோலி போன்ற ஒருவரால் தான் அது போன்ற இன்னிங்ஸை விளையாட முடியும். குறிப்பாக ஹாரிஸ் ரவூப் வீசிய சிறந்த பந்தை விராட் கோலி நேராக சிக்சர் அடித்தது நம்ப முடியாததாக அமைந்தது. அப்போட்டியில் விராட் கோலி 82 ரன்கள் அடித்தார். விராட் கோலியின் அந்த இன்னிங்ஸ் விட ஒரு சிறந்த இன்னிங்ஸை நான் என்னுடைய கேரியரில் பார்த்ததில்லை"என்று கூறினார்.
The Virat Kohli moment. 🇮🇳
— Johns. (@CricCrazyJohns) October 23, 2023
India needing 28 from 8 balls and then Kohli smashed this iconic six against Haris Rauf - One of the greatest shots in cricket history. pic.twitter.com/aGHwKEe0EN
அதாவது ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் இந்தியா 160 ரன்களை துரத்தியது. இருப்பினும் அப்போட்டியில் ஆரம்பத்திலேயே ரோஹித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை இழந்த இந்தியா 31/4 எனத் தடுமாறியது. அப்போது ஹர்திக் பாண்டியாவுடன் கூட்டணி அமைத்தார் விராட் கோலி.
Shaheen Shah Afridi said "Virat Kohli's 82* - I have never seen a better innings than that in my career". [Star Sports] pic.twitter.com/8bZgWEs6hL
— Johns. (@CricCrazyJohns) August 21, 2024
குறிப்பாக ஹாரிஸ் ரவூப் வீசிய 19வது ஓவரில் பின்னங்காலில் நின்று நேராக விராட் கோலி அடித்த சிக்சர் ஒட்டுமொத்த உலகையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த போட்டியில் கடைசி வரை களத்தில் நின்ற அவர் 53 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 154.72 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் 82 ரன்கள் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Jay Shah: சின்ன வயசுல இப்படி ஒரு பதவியா.. ஜெய்ஷாவை தேடி வரும் யோகம்!
மேலும் படிக்க: Ricky Ponting:மிகச்சிறந்த பவுலர்.. ஆஸ்திரேலியா வீரர்களுக்கு இடம் இல்லை! ரிக்கி பாண்டிங் சொன்ன இந்திய வீரர் யார்?