மேலும் அறிய
மதுரை மாநகராட்சியில் 200 கோடி முறைகேடு விவகாரம் ; 41வது கூட்டத்தில் அமளி? பரபரப்பு, காவல்துறை குவிப்பு !
பாஜக உள்ளிட்ட கட்சிகள் மேயர் பதவி விலக கூறி கோரிக்கை விடுத்த நிலையில் மேயருக்கு எதிராக முழக்கம் எழுப்பவும் வாய்ப்புள்ளதால் காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சி
Source : whats app
மதுரை மாநகராட்சி 41-ஆவது மாமன்ற கூட்டம் - 200 கோடி ரூபாய் வரி முறைகேடு விவகாரம் குறித்து அமளி ஏற்பட வாய்ப்பு - காவல்துறை குவிப்பு.
மதுரை மாநகராட்சியில் மோசடி என்ன நடந்தது
100 வார்டுகளை கொண்ட மதுரை மாநகராட்சியில் அதிகளவு மக்கள் தொகை கொண்டுள்ளது. இந்த சூழலில் மாநாகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் கட்டங்களுக்கு வரிகுறைப்பு செய்து மோசடி நடைபெற்றது, பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் அளவு வரி முறைகேடு நடைபெற்றது தொடர்பாக எழுந்த புகாரின் கீழ் வாசுகி, சரவணபுவனேஸ்வரி, பாண்டிசெல்வி, முகேஷ்சர்மா,சுவிதா ஆகிய 5 மண்டல தலைவர்கள் மற்றும் வரிவிதிப்பு குழு தலைவர் விஜயலட்சுமி, நகரமைப்பு குழு தலைவர் ஜெ.மூவேந்திரன் ஆகிய 7 பேர் ராஜினாமா செய்தனர். இந்த சூழலில் மாநகராட்சியில் நடைபெற்ற முறைகேட்டில் ”பாஸ்வேர்டை மேலதிகாரிகள் திருட்டுத்தனமாக பயன்படுத்தினார்கள்” - என பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பில் கலெக்டர்களின் குற்றஞ்சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.
அமளி ஏற்பட வாய்ப்பு உள்ளது
தொடர்ந்து மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரிய பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை மாநகராட்சி 41-ஆவது மாமன்ற கூட்டம் நடைபெறவுள்ளது. 200 கோடி ரூபாய் வரி முறைகேடு விவகாரம் குறித்து அமளி ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் காவல்துறையினர் மாநகராட்சி பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாநகராட்சியின் 41ஆவது மாமன்ற கூட்டம்
முறைகேடு தொடர்பாக மாநகராட்சி பணியாளர்கள், ஊழியர்கள், முன்னாள் உதவி ஆணையர் மற்றும் ஏஜெண்டுகள் உள்ளிட்டோர் தொடர்ந்து கைது செய்யப்பட்டுவருகின்றனர். முறைகேடு குறித்து விசாரணை நடத்துவதற்காக உயர்நீதிமன்ற உத்தரவுபடி மதுரை சரக டிஜிபி அபினவ்குமார் தலைமையில் விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ளது. வரி முறைகேட்டை கண்டித்து பல்வேறு கட்சியினரும் போராட்டம் நடத்திய நிலையில் மாநகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடு கேள்விக்குறியானது. இந்த பரபரப்புக்கிடையே இன்று மதுரை மாநகராட்சியின் 41ஆவது மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற்று வருகிறது.
மேயருக்கு எதிராக முழக்கம்
இந்த மாமன்ற கூட்டத்தின் போது வரி முறைகேடு தொடர்பாக அனைத்து கட்சியினரும் கேள்வி எழுப்பி விவாதம் செய்ய உள்ள நிலையில் அமளி ஏற்பட வாய்ப்பு. ஏற்கனவே பாஜக உள்ளிட்ட கட்சிகள் மேயர் பதவி விலக கூறி கோரிக்கை விடுத்த நிலையில் மேயருக்கு எதிராக முழக்கம் எழுப்பவும் வாய்ப்புள்ளதால் காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















