Wife Kills Husband: பாபநாசம் கான்செப்ட் - டைல்ஸ்க்கு அடியில் கணவன் Body, காதலனுடன் ஓடிய Lady
Wife Kills Husband: மகராஷ்டிராவில் கணவனை கொன்ற பெண் காதலனுடன் தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Wife Kills Husband: மகராஷ்டிராவில் கணவனை கொன்றுவிட்டு காதலனுடன் தப்பி ஓடிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
பாபநாசம் கான்செப்டில் கொலை
கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த பாபநாசம் படபாணியில், மகாராஷ்டிராவில் அரங்கேறிய கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பால்கர் மாவட்டத்தில் ஒரு வீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட டைல்ஸ் ஓடுகள் சந்தேகத்தை எழுப்பியதை அடுத்து, அதனை பெயர்த்து எடுத்ததில் ஒரு கொடூரமான கொலை அமபலமாகியுள்ளது. மண்ணில் புதைக்கப்பட்டு இருந்த உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இறந்தவர் நல்லசோபராவில் உள்ள கங்னிபாடாவில் வசிக்கும் விஜய் சவுஹான் (34) என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். உடல் கண்டுக்கப்பட்ட தகவல் வெளியானதைத் தொடர்ந்து தப்பியோடிய, சவான் மனைவி சமன் தேவி (28), அவரது காதலர் என்று கூறப்படும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த மோனு சர்மா (20) ஆகியோரைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதேபாணியில் தான், பாபநாசம் படத்திலும் கொல்லப்பட்ட ஒருவரின் உடலை, கட்டுமான பணி நடைபெற்று வரும் ஒரு இடத்தில் கமல்ஹாசன் புதைத்து இருப்பார்.
காதலனுடன் தப்பி ஓடிய லேடி
காவல்துறை தகவல்களின்படி, ஜூலை 10 ஆம் தேதி முதல் பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டும் பதில் அளிக்காததால், சவுஹானின் சகோதரர்கள் அவரைத் தேடத் தொடங்கியுள்ளனர். அவரது வீட்டிற்குச் சென்றபோது, கணவன் வேலைக்காக வெளியே சென்றிருப்பதாக சாமன் தேவி தெரிவித்துள்ளார். தொடர்ந்து, அவரைத் தொடர்பு கொள்ள மேற்கொண்ட அடுத்தடுத்த முயற்சிகளும் தோல்வியையே கண்டுள்ளன. இதையடுத்து, ஜூலை 19 அன்று சகோதரர்கள் தனது அண்ணியை மீண்டும் தொலைபேசி வாயிலாக தொடர்புகொள்ள முயன்றுள்ளனர். இந்த முறை அவரது செல்போனும் சுவிட்ச் ஆஃப் என வந்துள்ளது. இதையடுத்து அண்ணியை நேரிலேயே சந்திக்கலாம் என வீட்டிற்கு வந்துள்ளனர். அங்கும் அவர் இல்லாததால், விஜயின் சகோதரர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
டைல்ஸ்க்கு அடியில் கண்டெடுக்கப்பட்ட உடல்
வீட்டிற்குள் சென்று ஆய்வு செய்தபோது, உள்ளே புதியதாக டைல்ஸ் ஒட்டப்பட்டு இருந்ததை கண்டு சந்தேகம் அடைந்துள்ளனர். இதனால் அவர்கள் சில டைல்ஸ் ஓடுகளை அகற்றி பார்த்துள்ளனர். அப்போது கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தடயவியல் நிபுணர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் முன்னிலையில் உடலை தோண்டி எடுத்துள்ளனர். மிகவும் மோசமாக அழுகிய நிலையில் இருந்த அந்த உடல் மும்பையில் உள்ள ஜேஜே மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
உடலை கைப்பற்றி விசாரணை:
தப்பிச் சென்ற சாமன் தேவி உள்ளிட்டோரை தேடி வரும் போலீசார், பாரதிய நியாய சன்ஹிதாவின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். குற்றத்தில் மற்றொரு உள்ளூர்வாசிக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அக்கம்பக்கத்தினரை விசாரித்ததில், விஜய் கடந்த 10ம் தேதியிலிருந்தே வீட்டில் இல்லை என்றும், 19ம் தேதி முதல் அவரது மனைவியையும் காணவில்லை என்று தெரிவித்துள்ளனர். விஜய் மரணத்திற்கு உண்மையான காரணம் என்ன? ஏன்? எப்படி? கொல்லப்பட்டார் என்பது போன்ற விவரங்கள், தலைமறைவாகியுள்ள அவரது மனைவி மற்றும் மோனு ஆகியோரை கைது செய்தால் தான் தெரிய வரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.





















