மேலும் அறிய
Top 10 News Headlines: ஒரே நாளில் 14 ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடிப்பு, பிரதமர் மோடி நிறைவுரை, சீனாவை முந்திய இந்தியா - 11 மணி செய்திகள்
Top 10 News Headlines Today July 29: இந்தியா முழுவதிலும் இன்று காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.

11 மணி தலைப்புச் செய்திகள்
Source : ABP
- NDA கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகுவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், நாளை தனது ஆதரவாளர்களுடன் கூட்டணி குறித்து அவர் முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
- எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை இன்று ஒரே நாளில் சிறைபிடித்து, விசைப் படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கை கடற்படை அட்டூழியம்.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.73,200-க்கு விற்பனை. ஒரு கிராம் ரூ.9,150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- நெல்லை பாப்பாகுடியில், காவல் உதவி ஆய்வாளரை வெட்ட முயன்ற 17 வயது சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
- மக்களவையில் நடைபெறும் ‘ஆபரேஷன் சிந்தூர்‘ விவாதத்தில் இன்று பிரதமர் மோடி நிறைவுரை ஆற்றுவார் என தகவல்.
- பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை தத்தெடுக்க எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முடிவு.
- ஏமனில் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிரந்தரமாக ரத்து. ஏமன் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய கிராண்ட் முஃப்தி அபுபக்கர் அலுவலகம் தகவல்.
- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், உள்நாடு, சர்வதேச பயணிகளுக்கு டிக்கெட் கட்டணங்களில் தள்ளுபடி, சலுகைகளை அறிவித்துள்ளது. 15 - 25% வரை தள்ளுபடி அறிவிப்பு.
- உக்ரைன் உடனான போரை 12 நாட்களுக்குள் நிறுத்த, புதினுக்கு ட்ரம்ப் கெடு. போரை நிறுத்தாவிட்டால் கடும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என எச்சரிக்கை.
- அமெரிக்க ஸ்மார்ட்போன் சந்தையில் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா 44% பங்குகளை கைப்பற்றியுள்ளது. கடந்த ஆண்டு 60% பங்களிப்பை வைத்திருந்த சீனா தற்போது 25% மட்டுமே வைத்துள்ளது.
- உலகக் கோப்பை செஸ் தொடரை வென்று சாதனை படைத்த திவ்யா தேஷ்முக்கிற்கு குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து. 2-ம் இடம் பிடித்த கோனேரு ஹம்பியும் திறமையை வெளிப்படுத்தியதாக பாராட்டு.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
பொது அறிவு
கல்வி





















