மேலும் அறிய
IPL 2021, DC vs KKR: சிஎஸ்கேவை சந்திக்க கேகேஆர் ரெடி! டெல்லி vs கொல்கத்தா மேட்ச் ஹைலைட்ஸ்
டெல்லி கேப்பிடல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
1/6

ஷார்ஜாவில் நடைபெற்ற ஐபிஎல் குவாலிஃபையர் 2 போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
2/6

இதைத் தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் பிருத்வி ஷா மற்றும் ஷிகர் தவான் சற்று நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆட்டத்தின்3ஆவது ஓவரை தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி வீசினார். அவர் வீசிய முதல் பந்தில் பிருத்வி ஷா எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அடுத்த பேட்ஸ்மேன்களும் சொதப்ப, டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது.
3/6

எளிதாக இலக்கை சேஸ் செய்த கொல்கத்தாவுக்கு, சுப்மன் கில்லும், வெங்கடேஷ் ஐயரும் வலுவான ஓப்பனிங் கொடுத்தனர்.
4/6

எளிதாக வெல்ல வேண்டிய போட்டியின் கடைசி ஓவர்களில், கொல்கத்தா பேட்டரிகள் நான்கு பேர் அடுத்தடுத்து டக்-அவுட்டாகினர்.
5/6

இரண்டு பந்துகளில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில், ராகுல் திரிபாதி சிக்ஸ் அடித்து கொல்கத்தாவின் வெற்றியை உறுதி செய்தார்.
6/6

இதன்மூலம் கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியது. இதற்கு முன்பாக கொல்கத்தா அணி 2012 மற்றும் 2014ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்தது. அந்த இரண்டு முறையும் கொல்கத்தா அணி ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியது. இதற்கு முன்பாக கொல்கத்தா அணி 2012 மற்றும் 2014ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்தது. அந்த இரண்டு முறையும் கொல்கத்தா அணி ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published at : 14 Oct 2021 07:56 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
கிரிக்கெட்
கல்வி
Advertisement
Advertisement





















