IPL 2025 KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
IPL 2025 KKR vs RR: கொல்கத்தா அணி டாஸ் வென்றுள்ள நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து ஆடி வருகிறது.

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், 18வது சீசனின் 6வது ஆட்டத்தில் இன்று கவுகாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.
இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் இன்று தங்களது முதல் வெற்றிக்காக களமிறங்குகின்றன. இந்த போட்டி கவுகாத்தியின் பர்ஸ்பரா கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் அஜிங்க ரஹானே முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
ப்ளேயிங் லெவன்:
ஆர்சிபி அணியுடன் சொந்த மண்ணில் தோல்வி அடைந்த கொல்கத்தா அணி இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று முழுமுனைப்பில் களமிறங்கியுள்ளது. கொல்கத்தா அணியில் ரஹானே தலைமையில் டி காக், வெங்கடேஷ் ஐயர், ஆர் சிங், மொயின் அலி, ரஸல், ஆர் சிங், ஸ்பென்சர் ஜான்சன், வைபவ் அரோரா, ராணா, வருண் சக்கரவர்த்தி களமிறங்கியுள்ளனர்.
இந்த போட்டியிலும் ரியான் பராக் தலைமையில் களமிறங்கிய கொல்கத்தா அணியில் சாம்சன், ஜெய்ஸ்வால், ஜெய்ஸ்வால், ஹெட்மயர், துருவ் ஜுரெல், ஹசரங்கா, தீக்ஷனா, ஆர்ச்சர், துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா களமிறங்கியுள்ளனர்.
தவறை சரி செய்யப்போவது யார்?
கடந்த போட்டியில் செய்த தவறை இந்த போட்டியில் இரு அணிகளும் சரி செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சு மிகவும் பலவீனமாக உள்ளது. சன்ரைசர்ஸ் அணியுடனான போட்டியில் 286 ரன்களை வாரி வழங்கிய ராஜஸ்தான் அணி இந்த போட்டியில் பந்துவீச்சை சரி செய்யுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தா அணியும் ஆர்சிபி அணியுடன் முதல் போட்டியில் முதல் 10 ஓவர்களில் பட்டாசாய் ரன்களை குவித்து அடுத்த 10 ஓவர்களில் சரிந்தது. இதனால், இன்றைய போட்டியில் பின்வரிசை பேட்டிங் பக்கபலமாக அமையுமா? என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
கேப்டனாக ஜொலிப்பாரா பராக்?
மேலும், சாம்சன் காயம் காரணமாக கடந்த போட்டியில் ரியான் பராக் கேப்டனாக பொறுப்பேற்ற நிலையில் இன்றைய போட்டியிலும் அவரே கேப்டனாக நீடித்துள்ளார். கடந்த போட்டியில் ஃபீல்டிங் செட்டப்பில் செய்த தவறை இந்த முறை ரியான் பராக் சரி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய போட்டியில் இரு அணிகளும் ரன்மழை பொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த போட்டியில் 287 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணியும் 242 ரன்கள் விளாசியதால் இன்றைய போட்டியிலும் அவர்கள் பேட்டிங்கில் பலம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெய்ஸ்வால், ரியான் பராக் சிறப்பாக ஆட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

