மேலும் அறிய

இனி பாலுக்கு பிரச்னையே இருக்காது.. விவசாயிகளுக்கு அடிச்சது ஜாக்பாட்.. தெரிஞ்சுக்கோங்க!

பால் உற்பத்தியை பெருக்கும் நோக்கில் இரண்டு திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ராஷ்டிரிய கோகுல் திட்டத்திற்கு கூடுதலாக 1000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை, பால்வள மேம்பாட்டுக்கான திருத்தப்பட்ட தேசிய திட்டமான என்பிடிடி (NPDD) திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதோடு, ராஷ்டிரிய கோகுல் திட்டத்திற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை:

மத்திய அரசின் திட்டமான திருத்தப்பட்ட என்பிடிடிக்கு கூடுதலாக 1000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பதினைந்தாவது நிதிக்குழு காலத்திற்கான (2021-22 முதல் 2025-26 வரை) மொத்த நிதி ஒதுக்கீடு ₹2790 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த முயற்சி பால்வள உள்கட்டமைப்பை நவீனமயமாக்குதல், விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இது துறையின் நிலையான வளர்ச்சியையும் உற்பத்தித்திறனையும் உறுதி செய்கிறது. திருத்தியமைக்கப்பட்ட என்பிடிடி, பால் கொள்முதல், பதப்படுத்தும் திறன், சிறந்த தரக்கட்டுப்பாடு ஆகியவற்றிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும். இதன் மூலம் பால்வளத் துறைக்கு உத்வேகம் அளிக்கும்.

விவசாயிகள் சந்தைகளுக்கு சிறந்த அணுகலைப் பெற உதவுவது, மதிப்புக் கூட்டல் மூலம் சிறந்த விலையை உறுதி செய்வது, விநியோகச் சங்கிலியின் செயல்திறனை மேம்படுத்துவது, அதிக வருமானம், அதிக கிராமப்புற வளர்ச்சி ஆகியவற்றுக்கு இது வழிவகுக்கும்.

மத்திய அமைச்சரவை ஒப்புதல்:

திருத்தியமைக்கப்பட்ட தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டம், வெண்மைப் புரட்சி 2.0 உடன் இணைந்து இந்தியாவின் நவீன உள்கட்டமைப்பை மாற்றியமைப்பதுடன், புதிய தொழில்நுட்பம், தரமான பரிசோதனை ஆய்வகங்கள் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் புதிதாக உருவாக்கப்பட்ட கூட்டுறவுகளுக்கு மேலும் ஆதரவளிக்கும். இந்த திட்டம் கிராமப்புற வாழ்வாதாரங்களை மேம்படுத்தவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், நாடு முழுவதும் உள்ள  கோடிக் கணக்கான விவசாயிகளுக்கு வலுவான, பால் பண்ணைத் தொழிலை ஏற்படுத்தவும் உதவும். 

ராஷ்டிரிய கோகுல் திட்டத்திற்கு கூடுதலாக 1000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பதினைந்தாவது நிதிக்குழு காலத்திற்கான (2021-22 முதல் 2025-26 வரை) மொத்த நிதி ஒதுக்கீடு 3400 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி குறிப்பிடுகையில், "ராஷ்டிரிய கோகுல் திட்டம் (RGM) தொடர்பான அமைச்சரவையின் முடிவு பால் உற்பத்தியை அதிகரிக்கும். உள்நாட்டு கால்நடை இனங்களை மேம்படுத்தும்.  பல பால் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும். இது கால்நடைத் துறையில் தன்னிறைவுக்கான ஒரு பெரிய முயற்சியாகும்" என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GATE Result 2025: மாணவர்களே அலர்ட்.. கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி? முதலிடம் யாருக்கு?
GATE Result 2025: மாணவர்களே அலர்ட்.. கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி? முதலிடம் யாருக்கு?
100 நாள் சவால்- அரசுப்பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறன் சோதனை- கல்வித்துறை அறிவிப்பு
100 நாள் சவால்- அரசுப்பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறன் சோதனை- கல்வித்துறை அறிவிப்பு
"ரூ 1700 சொத்து" இந்தியாவின் பணக்கார எம்எல்ஏவை விடுங்க.. ஏழை எம்எல்ஏவின் நிலையை பாருங்க
Chennai Budget 2025: சென்னை பட்ஜெட்டில் இளைஞர்கள், குழந்தைகளை கவரும் அறிவிப்புகள்.. ஹைலைட்ஸ் பார்க்கலாமா.?
சென்னை பட்ஜெட்டில் இளைஞர்கள், குழந்தைகளை கவரும் அறிவிப்புகள்.. ஹைலைட்ஸ் பார்க்கலாமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sunita williams Return | சுனிதாவை பாராட்டாத மோடி 2007-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் பின்னணி..! | Haren PandyaSenthil Balaji Delhi Visit | TASMAC ஊழல்.. துரத்தும் ED டெல்லி பறந்த செந்தில் பாலாஜி திடீர் விசிட்! பின்னணி என்ன?Sunita Williams: 27 ஆயிரம் KM Speed! 1927 டிகிரி செல்சியஸ்! Real Wonder Woman சுனிதா வில்லியம்ஸ்DMDK Alliance DMK |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GATE Result 2025: மாணவர்களே அலர்ட்.. கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி? முதலிடம் யாருக்கு?
GATE Result 2025: மாணவர்களே அலர்ட்.. கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி? முதலிடம் யாருக்கு?
100 நாள் சவால்- அரசுப்பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறன் சோதனை- கல்வித்துறை அறிவிப்பு
100 நாள் சவால்- அரசுப்பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறன் சோதனை- கல்வித்துறை அறிவிப்பு
"ரூ 1700 சொத்து" இந்தியாவின் பணக்கார எம்எல்ஏவை விடுங்க.. ஏழை எம்எல்ஏவின் நிலையை பாருங்க
Chennai Budget 2025: சென்னை பட்ஜெட்டில் இளைஞர்கள், குழந்தைகளை கவரும் அறிவிப்புகள்.. ஹைலைட்ஸ் பார்க்கலாமா.?
சென்னை பட்ஜெட்டில் இளைஞர்கள், குழந்தைகளை கவரும் அறிவிப்புகள்.. ஹைலைட்ஸ் பார்க்கலாமா.?
RRB Exam Cancelled: நியாயமே இல்லையா? ஆர்ஆர்பி தேர்வு திடீர் ரத்து- தெலங்கானா சென்ற தமிழ்நாடு தேர்வர்கள் அவதி!
RRB Exam Cancelled: நியாயமே இல்லையா? ஆர்ஆர்பி தேர்வு திடீர் ரத்து- தெலங்கானா சென்ற தமிழ்நாடு தேர்வர்கள் அவதி!
Sunita Williams: விடாமுயற்சியின் எடுத்துக்காட்டு..  பூமிக்கு வந்த சுனிதா வில்லியம்ஸ்.. பிரதமர் மோடி வாழ்த்து..
Sunita Williams: விடாமுயற்சியின் எடுத்துக்காட்டு.. பூமிக்கு வந்த சுனிதா வில்லியம்ஸ்.. பிரதமர் மோடி வாழ்த்து..
TN Govt: ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது… பணி நீக்கம்- தமிழக அரசு எச்சரிக்கை!
TN Govt: ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது… பணி நீக்கம்- தமிழக அரசு எச்சரிக்கை!
Trump Vs Canada: கனடாவை காரித் துப்பிய ட்ரம்ப்.. எதிர் வரி போட்டதுக்காக இப்படியா பேசுறது.?
கனடாவை காரித் துப்பிய ட்ரம்ப்.. எதிர் வரி போட்டதுக்காக இப்படியா பேசுறது.?
Embed widget