அட்லீ கொடுத்த அதிர்ச்சி போதாதா? சன் பிக்சர்ஸ் பேஸ்மட்டத்தையே அதிர வைத்த அல்லு அர்ஜுன்!
அட்லீயின் சம்பளத்தைக் கேட்டு ஷாக்காகியிருந்த சன் பிக்சர்ஸ் தரப்பு, தற்போது அல்லு அர்ஜுன் கேட்ட சம்பளத்தை எண்ணி ஷாக்கின் உச்சத்திற்கே சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

கறார் காட்டும் சன் பிச்சர்ஸ்:
இந்தியில் ஷாருக்கான், நயன்தாரா நடிக்க அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. சொல்லப்போனால், தொடர்ந்து தோல்விப் படங்களையே சந்தித்து வந்த இந்தி சினிமாவுக்கு ஜவான் வெற்றி எனர்ஜி பூஸ்டாக அமைந்தது. ஏனெனில் இந்த திரைப்படம் உலக அளவில் 1000 கோடியை வசூலை வாரிக்குவித்தது. இதையடுத்து சன்பிக்சர்ஸ் நிறுவனம் அட்லீயை வைத்து அடுத்த படத்தை தயாரிக்க திட்டமிட்டது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இப்படத்திற்காக அட்லீ கொடுத்த பட்ஜெட்டைப் பார்த்து ஒட்டுமொத்த சன்பிக்சர்ஸ் நிர்வாகத்திற்கும் தலை சுற்றிவிட்டதாம். போதாக்குறைக்கு அட்லீ வேறு 100 கோடி அளவிற்கு சம்பளம் கேட்க இருந்ததாகவும், ஆனால் சன் பிக்சர்ஸ் அக்ரீமெண்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ள 55 கோடி ரூபாயை மட்டுமே தர முடியும் என கறாராக கூறிவிட்டதாகவும் தெரிகிறது.
தெலுங்கு தயாரிப்பாளர்களை நாடும் அட்லீ - அல்லு அர்ஜுன்:
இதனால் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பார்களா? இல்லை கைவிடுவார்களா? என்ற விவாதமும் ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனிடையே தெலுங்கு தயாரிப்பாளர்களையும் அணுகி அட்லீயிடம் கதை கேட்கும் படி அல்லு அர்ஜுன் பரிந்துரைத்து வருவதாக ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது சன்பிக்சர்ஸிடம் அல்லு அர்ஜுன் என்ன சம்பளம் கேட்டிருக்கிறார் என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
அல்லு அர்ஜுன் கேட்கும் சம்பளம்:
புஷ்பா 1 மற்றும் 'புஷ்பா 2 தி ரூல்' படங்கள் அல்லு அர்ஜூனை பான் இந்தியா ஸ்டாராக ஜொலிக்க வைத்துள்ளது. இந்தப் படம் ரூ.1800 கோடியை வசூலித்தது. படங்கள் கோடிகளில் வசூல் குவித்தால் அடுத்த படத்திற்கு ஹீரோக்கள் வழக்கமாக செய்வது என்ன? சம்பளத்தை டபுள், சில சமயம் ட்ரீபுள் மடங்காக கூட உயர்த்திவிடுவார்கள். அந்த வகையில் அல்லு அர்ஜூன் இயக்குநர் அட்லீ இயக்கவுள்ள பான் இந்தியா படத்தில் நடிக்க 170 கோடி ரூபாய் சம்பளம் கேட்டிருக்கிறாராம். ஏற்கனவே அட்லீ கொடுத்த பட்ஜெட்டைப் பார்த்து சன் பிக்சர்ஸ் மிரண்டு போய் இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே அல்லு அர்ஜூன் வேறு தனது பங்கிற்கு தயாரிப்பு நிறுவனத்திற்கு ஷாக் கொடுத்துள்ளார். இந்த படம் குறித்த அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியாகும் எனக்கூறப்படுகிறது. பட அறிவிப்பை சன்பிக்சர்ஸ் வெளியிடுமா? என பொறுத்திருந்து பார்ப்போம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

