RR vs KKR: சுழலில் சிக்கிய ராஜஸ்தான்.. காப்பாற்றிய துருவ் ஜூரல்.. கொல்கத்தாவுக்கு இலக்கு என்ன?
RR vs KKR: ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை எடுத்தது

ஐபிஎல் 18வது சீசனின் 6வது ஆட்டத்தில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் கவுகாத்தியில் மோதின.
இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் முதல் வெற்றிக்காக களமிறங்கின. இந்த போட்டி கவுகாத்தியின் பர்ஸ்பரா கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் அஜிங்க ரஹானே முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.இரு அணிகளிலும் தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. கேகேஆர் அணியில் சுனில் நரைனுக்கு பதிலாக மொயின் அலியும், ராஜஸ்தான் அணியில் ஃபரூக்கிக்கு பதிலாக ஹசராங்கவும் சேர்க்கப்பட்டனர்.
தொடக்க வீரர்கள் ஏமாற்றம்:
முதலில் பேட்டிங்கை தொடங்கியது ராஜஸ்தான் அணி, கடந்த போட்டியில் அரைசதம் அடித்த சஞ்சு சாம்சன் 13 ரன்களில் வைபவ் அரோரா பந்தில் நடையை கட்ட, அடுத்ததாக கேப்டன் ரியன் பராக் களமிறங்கினார். அதிரடியாக தனது இன்னிங்ஸ்சை தொடங்கிய கேப்டன் பராக் மூன்று சிக்சர்கள் விளாசினார். பவர் பிளே முடிவில் 54 ரன்கள் எடுத்தது.
சுழல் மாயஜாலம்:
பவர் பிளேவுக்கு கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான வருண் சக்கரவர்த்தி மற்றும் மொயின் அலி இருவரும் ராஜஸ்தான் பேட்ஸ்மென்களை திணறடித்தனர். ரியன் பராக் வருணின் சுழலில் விக்கெட்டை பறிக்கொடுக்க மொயின் அலியின் அடுத்த ஓவரில் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட யஷ்யஸ்வி ஜெய்ஸ்வால் 29 ரன்களுக்கி ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய ஹசரங்கா மற்றும் நிதிஷ் ராணா 4 மற்றும் 8 ரன்களுக்கு நடையை கட்ட ராஜஸ்தான் அணி 82 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
காப்பாற்றிய துருவ் ஜுரேல்:
ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் கடந்த போட்டியை போலவே நெருக்கடியான கட்டத்தில் ராஜஸ்தான் அணிக்கு கைக்கொடுத்தார், இதற்கிடையில் ஷுபம் துபே 9 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். அடுத்தாக களமிறங்கிய ஹெட்மேயரும் ரன்களை அடிக்க சிரமப்பட்டார். கொல்கத்தா அணியின் பந்து வீச்சாளர்களின் கட்டுக்கோப்ப்பான பந்து வீச்சால் ராஜஸ்தான் அணியின் ரன் வேகம் பொறுமையாக நகர்ந்தது.
152 ரன்கள் இலக்கு:
துருவ் ஜூரேல் 33 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆர்ச்சரின் சிறிய கேமியோவால் ராஜஸ்தான் அணி 150 ரன்களை கடந்தது, 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை எடுத்தது. கொல்கத்தா அணியில் வருண் மற்றும் மொயின் அலி, வைபவ் அரோரா, ஹர்சித் ராணா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் ஸ்பென்சர் ஜான்சன் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
152 ரன்கள் என்கிற இலக்கை கொல்கத்தா அணி எட்டி தங்களது முதல் வெற்றியை பதிவு செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

