Rajinikanth: ரஜினியை பார்த்து பைத்தியக்காரன் என்ற பிரபல இயக்குனர்! பார்த்திபன் பகிர்ந்த ஷாக்!
மறைந்த பிரபல இயக்குனர் ஸ்ரீதர் ரஜினிகாந்தைப் பார்த்த பைத்தியக்காரத்தனமாக செய்கிறார் என்று திட்டிய தகவலை நடிகர் பார்த்திபன் பகிர்ந்துள்ளார்.

தமிழ் திரையுலகின் நடிகர், இயக்குனராக உலா வருபவர் பார்த்திபன். இவர் நடிகர் தனுஷுடன் இணைந்து ஆடுகளம் படத்தில் நடிக்க முடிவாகியிருந்தது. ஆனால், சில காரணங்களால் அவரால் அந்த படத்தில் நடிக்க இயலவில்லை. இந்த நிலையில், நடிகர் தனுஷுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து பார்த்திபன் பேசியது குறித்து கீழே காணலாம்.
தயங்கிய தனுஷ்:
ஒரு முறை சித்ரா லட்சுமணிடம் நேர்காணலில் பேசிய நடிகர் பார்த்திபன், ஆடுகளம் படம் நான் பண்ண வேண்டியது. வெற்றி மாறன் என்னை அந்த ரோலுக்கு சம்மதம் வாங்கிட்டு இருக்காரு. அந்த ரோல் அப்போ இவ்வளவு வயதான கதாபாத்திரமாக இல்லை. அப்போ, நானும் தனுஷும் நடிக்க கதை ஒன்னு நான் ரெடி பண்ணிருந்தேன்.
இதை வந்து நான் சந்திச்சு கதை சொன்னேன். செல்வராகவன் அப்போ தம்பி வந்து தயங்குறாரு சார்.. அவரு வயசுக்கு ஏத்த மாதிரி பசங்களா இருந்தா ஈசியா இருக்கும்னு ஃபீல் பண்றாரு. உங்களோடு எப்படி ஒர்க் பண்றதுனு யோசிக்குறாரு சார்..
ஸ்ரீதரிடம் பயம்:
எனக்கு அப்படி எல்லாம் கிடையாது.. அவருக்கு கீழவிட இறங்கி நான் கோலி ஆடிட்டு இருப்பேன் நான். நான் அந்த மாதிரி ஆளு. அப்பதான் எனக்கு தெரிஞ்சது. தன்வினை தன்னைச்சுடும்னு ஒரு விஷயம், புதிய பாதை வந்த பிறகு ஸ்ரீதர் சார் என்னை அப்ரோச் பண்றாரு. நடுவுல வந்து ஒரு ஹோட்டல்ல மீட் பண்ணி, இந்தியில ஷாருக்கான், தமிழ்ல் நான். ஜாகிர் உசேனோட தபேலாவை அடிப்படையா வச்சு ஒரு முக்கோண காதல் கதை. நான் போனேன். உக்காந்தேன். கதை கேட்டேன். எல்லாம் ஓகே. கொஞ்சம் பயம் இருந்தது ஸ்ரீதர்கிட்ட.
பைத்தியக்காரத்தனம்:
இவ்வளவு பெரிய டைரக்டர். நம்ம அப்படியே சின்ன சின்ன பசங்க மாதிரி நம்ம ஒரு கதையை சொல்லி நம்ம டயலாக் சொல்லி அதெல்லாம் பண்ணிகிட்டு இருக்கோம். இவருகிட்ட போயி நாம மாட்டிகிட்டா நாம என்ன பண்றது. ரஜினி சார் விஷயமே அவருக்கு ஒத்து வரலனு. ரஜினி சார் பண்ற வேலைகள் எல்லாமே என்னயா இது ஒரு பைத்தியக்காரத்தனமா இருக்குது அப்படினு ஒன்னு சொன்னதாக கேள்விபட்ருக்கேன்.
இவரு 3 படிக்கட்டுல ஏறி கீழே இறங்கி வருவாரு. ஒன்னு மேல் படிக்கட்டுல நின்னு போன் பேச சொல்லு. இல்ல கீழ் படிக்கட்டுல இருந்து பேச சொல்லு. எதுக்கு அவன் பாட்டுல மேல ஏறுறான்.. கீழே இறங்குறான்.. அப்படினு கேப்பாரு. அப்போ இவ்வளவு பெரிய பேனா எடுத்து கையெழுத்து போடுவாரு இளமை ஊஞ்சல் ஆடுது படத்துல.
என்ன இதெல்லாம் ஒரு கம்பெனியோட எக்ஸ்கியூட்டிவ் ஆபீசர் பிளாஸ்டிக் பேனா வாங்கி வந்து கையெழுத்து போட்டுகிட்டு இருக்காரு. பி வாசு எல்லாம் சொல்லுவாரு. இதெல்லாம் கேட்டு கேட்டு பயம் எனக்கு அவருகிட்ட. அங்க போயி மாட்டிகிட்ட கஷ்டம்னு ஸ்ரீதர் சாருக்கு நான் நோ சொன்னேன். இதுதான் நமக்கு இப்போ ரெப்ளக்ட் ஆகுற மாதிரி நானே நினைச்சுகிட்டேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
நடிகர் ரஜினிகாந்த் ஸ்ரீதர் இயக்கத்தில் இளமை ஊஞ்சல் ஆடுகிறது, துடிக்கும் கரங்கள் ஆகிய படத்தில் நடித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

