CISF Recruitment 2025: 10-வது தேர்ச்சி பெற்றவரா? 1161 பணியிடங்கள்! மத்திய அரசுப் பணி; விவரம் இதோ!
CISF Recruitment 2025: மத்திய தொழிற்பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 1161 பணியிட வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரத்தை இங்கே காணலாம்.

மத்திய தொழிற்பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 1161 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு அடுத்த மாதம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
கான்ஸ்டபிள் (constable), பணியிடங்கள் இந்த வேலைவாய்ப்பு மூலம் நிரப்பப்பட உள்ளதாகவும், மேலும் இது தற்காலிக பணி மட்டுமே என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய தொழ்ற்பாதுகாப்பு படை (Central Industrial Security Force) :
இந்தியாவின் முக்கிய தொழிற்நிலையங்களைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட துணை ராணுவப்படை தான் மத்திய தொழிற்பாதுகாப்பு படை. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் இந்நிறுவனம், முன்னதாக இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, 2800 படை வீரர்களுடன், மத்திய அரசின் நிறுவனங்களுக்கு மட்டும் பாதுகாப்பு வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டது. இதனையடுத்து 1983ம் ஆண்டு முதல் ஆயுதம் ஏந்தும் உரிமை இந்த வீரர்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் அணு உலைகள், விண்வெளி ஆய்வகங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், பாதுகாப்பு தேவைப்படும் அரசு கட்டிடங்கள், புராதானச் சின்னங்கள் போன்றவைகளைப் பாதுகாக்கும் பொறுப்பில் மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்கள் பணியாற்றி வருகின்றனர்.
மத்திய தொழிற் பாதுகாப்புப் படையில் கான்ஸ்டபிள் பணிக்கானத் தகுதிகள்:
பணி விவரம்:
கான்ஸ்டபிள் (Constable - Tradesmen)
மொத்த பணியிடங்கள்: 1161
பணி இட விவரம்:
தமிழ்நாடு, மஹாராஷ்டிரா, ஹரியானா, புது டெல்லி, மத்திய பிரதேசம், இராஜஸ்தான், பீகார், புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம், மணிப்பூர், திரிபுரா, தெலங்கானா, பஞ்சாப், ராஜஸ்தான், ஒடிசா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நாடு முழுவதும் மண்டலம் வாரியாக பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி:
அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10-m வகுப்பு அல்லது பணியிடத்திற்கு தேவையான தகுதி பெற்றிருக்க வேண்டும். டெய்லர், எல்க்ட்ரிசியன், வெல்டர், மோட்டர் பம்பு அட்டெண்டண்ட், பெயிண்டர், மெக்கானிக், வாஷர்மென், சமையல்கலை நிபுணர் ஆகிய தொழில்முறை கல்வி பயின்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 01.08.2025-ம் படி, 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 23 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன் விவரத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பின் புகைப்படம் மூலம் தெரிந்து கொள்ளவும்.
ஊதிய விவரம்:
ஊதிய வரைவின் ( Pay Level-3 ) படி ரூ. 21,700 முதல் 69,100 வரை வரை ஊதியம் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ’allowances’ வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
உடல்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். அதன்பின், திறனறிவுத் தேர்வு நடத்தபடும். மருத்துவ பரிசோதனை செய்யப்படும். எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயார் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதோடு, உடல்நிலை தகுதித் தேர்வும் நடத்தப்படும்.
உடல்தகுதித் தேர்வு (physical efficiency test):
எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்:
உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும். தேர்வில் பொது அறிவு, ஆப்டிடியூட் கணிதம் உள்ளிட்டவைகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். வினா தாள் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே ரூ.100 -ஐ கட்டணமாக செலுத்த வேண்டும்.
மகளிர், முன்னாள் இராணுவ வீரர்கள், பழங்குடியின/பட்டியலின பிரிவினர் EWS-Economically Backward Class தகுதியுடையோர் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
மத்திய தொழில் பாதுகாப்பு படையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://cisfrectt.cisf.gov.in/ - என்ற லிங்கை கிளிக் செய்து தேவையான கல்விச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்தப் பணிக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.04.2025 (23.00 மணி வரை)
இது தொடர்பாக கூடுதல் விவரங்கள், விண்ணப்ப படிவம் ஆகியவற்றை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு https://cisfrectt.cisf.gov.in/file_open.php?fnm=BjPm383dCuIVObm7SorQpXojnbiqgzYaQDgDM58coHKu__LME8HBuUgU7MOJ60NyqOFh3_sm1cWU6D77LAqNOJ2nKgxhPSwycV-dj4_n7t8- என்ற லிங்கை கிளிக் செய்து காணலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

