Weather: இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை இருக்கு- நாளைய வானிலை எப்படி?
Tamilnadu Weather: தமிழ்நாட்டில் இன்று இரவு கனியாகுமரி , தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்ய உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இன்று இரவு ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தேனி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், 7 நாட்களுக்கு மழை நிலவரம் குறித்தும், வெப்பநிலை குறித்தும் வானிலை மையம் தெரிவித்தது குறித்து பார்ப்போம்.
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) March 19, 2025
7 நாட்களுக்கு வானிலை:
தமிழ்நாட்டின் தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக , வானிலையில் சற்று மாறுபாடு இருப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
Also Read: Solar Eclipse: பகலில் மறையும் சூரியன்.! வருடத்தின் முதல் சூரிய கிரகணம்: எப்போது?
Also Read: சுனிதா வில்லியம்ஸ் திரும்பியதற்கு டிரம்ப்தான் காரணமா? வெடிக்கும் அரசியல்..உண்மை என்ன?
19-03-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
20-03-2025 மற்றும் 21-03-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
22-03-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
23-03-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
24-03-2025 மற்றும் 25-03-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெப்பநிலை:
19-03-2025 மற்றும் 20-03-2025: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் 19-03-2025 மற்றும் 20-03-2025 : அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3 செல்சியஸ் அதிகமாக இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை முன்னறிவிப்பு:
சென்னையில், நாளை (20-03-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பொதுமக்கள் வானிலை தகவலுக்கு ஏற்ப , உங்களது தகவலை வேலைகளை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

