விக்ரமின் வீர தீர சூரன் படத்தை வெளியிட நீதிமன்றம் தடை...இதான் காரணம்
அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் திரைப்படம் நாளை வெளியாக இருந்த நிலையில் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கப் பட்டுள்ளது

வீர தீரன் சூரன்
அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் திரைப்படம் நாளை வெளியாக இருந்த நிலையில் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கப் பட்டுள்ளது.
எச் ஆர் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் விக்ரமின் 62 ஆவது படமாக உருவாகியுள்ள படம் வீர தீர சூரன். எஸ்.ஜே.சூர்யா , சூரஜ் வெஞ்சமூடு , துஷாரா விஜயன் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. விக்ரமின் சமீபத்திய படங்களுடன் ஒப்பிடும் போது இப்படம் ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படமாக அமையும் என்கிற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருந்தார்கள். இப்படியான நிலையில் வீர தீர சூரன் படத்திற்கு டெல்லி உயர் நீதிமன்ற இடைக்கால தடை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
என்ன காரணம் ?
வீர தீர சூரன் படத்தை எச் ஆர் பிக்ச்சர்ஸ் B4U மீடியா உடன் இணைந்து தயாரித்துள்ளது. படத்தின் சேட்டலைட் உரிமம் தொடர்பாக எழுந்த பிரச்சனையால் B4U மீடியா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து. தற்போது டெல்லி நீதிமன்றன் வீர தீர சூரன் படத்திற்கு இடையிலான தடை உத்தரவிட்டுள்ளது. நாளை காலை 9 மணி காட்சிக்கு படத்திற்கு தமிழ் நாடு அரசு அனுமதி வழங்கியது. தற்போது நாளை 10:30 வரை படத்தை வெளியிட இடைக்கால தடை பிறப்பிக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிகாலை 9 மணி சிறப்புக் காட்சி பார்க்க டிக்கெட் புக் செய்தவர்கள் ஏமாற்றமடைந்துள்ளார்கள்.
The Delhi High Court has adjourned the hearing of B4U’s case regarding its investment in #VeeraDheeraSooran Part 2 and issued an interim order blocking the film's release until 10:30 AM on March 27. Further updates are awaited.🙁 pic.twitter.com/fQfjvylQQl
— Christopher Kanagaraj (@Chrissuccess) March 26, 2025





















