மேலும் அறிய
அமைச்சர்களின் முன்னிலையில் நடந்த திருச்சி மலைக்கோட்டை கோவிலின் மரத்தேர் வெள்ளோட்டம்!
திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் புதிய மரத்தேர் வெள்ளோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவிலில் மரத்தேர் வெள்ளோட்டம்
1/6

திருச்சியின் மிகப்புகழ் வாய்ந்த அடையாளச் சின்னமாக விளங்குவது மலைக்கோட்டை. இது உச்சிப்பிள்ளையார் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது
2/6

இத்தகைய பிரசித்தி பெற்ற திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில், மலை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட ரூபாய் 8 லட்சம் மதிப்பிலான, தேக்கு மரத்திலான தேர் உள்ளது.
3/6

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தேரின் புறப்பாடினை உற்சவர் மண்டபத்தில் துவக்கி வைத்தனர்.
4/6

இவர்களுடன் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் , மண்டலம் 3ன் தலைவர் மதிவாணன், பகுதி செயலாளர் மோகன் ஆகியோர் தேரின் புறப்பாடினை உற்சவர் மண்டபத்தில் துவக்கி வைத்தனர்
5/6

தேரினை மாணிக்க விநாயகர் சன்னதியை சுற்றி வலம் வந்து மீண்டும் உற்சவர் மண்டபத்தில் நிலைநிறுத்தினர்.
6/6

முன்னதாக மாணிக்க விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கலந்துக்கொண்டனர்.
Published at : 23 Nov 2023 05:13 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
அரசியல்
நெல்லை
சேலம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion