EPS Plan | "யார் தயவும் தேவையில்லை அதிமுக தனித்தே ஆட்சிய பிடிக்கும்" தனிரூட்டில் எடப்பாடி பழனிசாமி!
பாஜக கூட்டணியில் அதிமுக இருந்தாலும் வெற்றி பெறுவதற்கு தேவையான மெஜாரிட்டி தொகுதிகளை வைத்துகொண்டு மீதி உள்ள தொகுதிகளை மட்டுமே கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்குவேன் என்றும் யார் தயவும் இல்லாமலே அதிமுகவை வெற்றி பெற வைக்க முடியும் என்றும் இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பாஜக தரப்பு அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.
2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தமிழக கட்சிகள் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்க ஆரம்பித்து விட்டது. அந்தவகையில் ஆளும் திமுக தற்போது இருக்கும் கூட்டணி கட்சிகளுடனே தேர்தலை சந்திக்க உள்ளது. அதேபோல், பாஜக கூட்டணியில் அதிமுகவும், நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடவும் தயாராகி வருகிறது. தவெக யாருடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது என்பது தொடர்பாக இன்னும் எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை.
இதனிடையே பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி இருந்தாலும் தமிழ் நாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையில் தான் இயங்கும் என்று அமித்ஷா அறிவித்தார். இச்சூழலில் தான் கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளும் முழுக்க முழுக்க தன்னுடைய கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும் என்று இபிஎஸ் தீவிரம் காட்டி வருகிறாராம்.
அந்த வகையில் தமிழ் நாட்டில் இருக்கும் 234 தொகுதிகளில் 180-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுகவினரை களம் இறக்கு இபிஎஸ் திட்டமிட்டுள்ளாரம் அப்படி 180 தொகுதிகளில் போட்டியிட்டால் 60 தொகுதிகளில் தோற்றால் கூட மெஜாரிட்டிக்கு தேவையான 118 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்காலாம் என்று இபிஎஸ் நினைக்கிறாராம்.
இந்த முறையை கையாண்டால் கூட்டணி உதவியே தேவையில்லை என்பது அவரது விருப்பம் என்று சொல்லப்படுகிறது. அந்தவகையில், மீதம் இருக்கும் 54 தொகுதிகளை பாஜாகாவிற்கு கொடுக்கலாம் என்றும் இபிஎஸ் இருப்பதாகவும் யார் தயவும் இல்லாமலே அதிமுகவை வெற்றி பெற வைக்க முடியும் என்றும் இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச் போட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பாஜக தரப்பு அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.





















