மேலும் அறிய

இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு: 630 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது?

இந்திய கடலோர காவல்படையில் நாவிக் மற்றும் யாந்திரிக்ஸ் பதவிகளுக்கான அறிவிப்பு வெளியாகி விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளது.

இந்திய கடலோர காவல்படை தேர்வு

இந்திய கடலோர காவல்படையில் நாவிக் மற்றும் யாந்திரிக்ஸ் பதவிகளுக்கான அறிவிப்பு வெளியாகி விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளது. 10, 12-ம் வகுப்பு, டிப்ளமோ முடித்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். கடலோர படை தொழில்நுட்ப பிரிவு மற்றும் பொது, உள்ளூர் பிரிவுகளுக்கு தேர்வு செய்யப்பட உள்ளது.

பொது மற்றும் உள்நாட்டு கிளை கீழ் உள்ள நாவிக் மற்றும் தொழில்நுப்ட பிரிவில் உள்ள யாந்திரிக்ஸ் ஆகிய பதவிகளுக்கு விரும்பமுள்ள ஆண்களில் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மொத்தம் 630 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

காலிப்பணியிடங்கள் விவரம் :

நாவிக் - 570 காலிப்பணியிடங்கள், யாந்திரிக்ஸ் - 60 காலிப்பணியிடங்கள்  மொத்தம் : 630 காலிப்பணியிடங்கள் உள்ளன. மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெட்ரானிக்ஸ் என யாந்திரிக்ஸ் பதவியில் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. நாவிக் பொது பணியில் 520 பணியிடங்கள், உள்நாட்டு கிளை பிரிவில் 50 இடங்கள் நிரப்பப்படுகிறது.

கல்வித்தகுதி

நாவிக் பதவிக்கு 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். யாந்திரிக்ஸ் பதவிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேஷன் ஆகியவற்றில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் (அல்லது) 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 3 அல்லது 4 வருட டிப்ளமோ முடித்திருக்கலாம்.

வயது வரம்பு

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும். அதிகப்படியாக 22 வயது வரை இருக்கலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் தளர்வு உள்ளது.

ஊதியம் விவரம் :

நாவிக் பதவிக்கு அடிப்படை சம்பளம் ரூ.21,700 ஆகும். இதனுடன் கொடுப்பனை, அகவிலைப்படி ஆகியவை கூடுதலாக வழங்கப்படும். யாந்திரிக்ஸ் பதவிக்கு அடிப்படை சம்பளம் ரூ.29,200 ஆகும். கூடுதலாக ரூ.6,200 மற்றும் கொடுப்பனை, அகவிலைப்படி வழங்கப்படும்.

தேர்வு  முறை

இப்பதவிகளுக்கு தகுதியானவர்கள் 4 கட்ட தேர்வு முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். முதல் கட்டமாக கணினி வழி தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சி அடையும் பொருட்டு, இதில் மதிப்பீடு தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெறுபவர்கள் உடற்தகுதித் தேர்விற்கு தகுதி அடைவார்கள். தொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். மேலும் மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். இரண்டாம் கட்டத்தில் தேர்ச்சி பெறும் நபர்களுக்கு இறுதி சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை, போலீஸ் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை நடத்தப்படும். இதனைத் தொடர்ந்து, நான்காவது கட்டத்தில் INS Chilka வில் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

இந்திய கடலோர காவல்படையில் சேர வேண்டும் என விரும்புகிறவர்கள் https://joinindiancoastguard.cdac.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 11 முதல் தொடங்கிய நிலையில் ஜூன் 25 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதார்கள் கண்டிப்பாக இமெயில் மற்றும் மொபைல் எண் கொண்டிருக்க வேண்டும். இதற்கு தேர்வு கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் செலுத்த வேண்டியது இல்லை.

இதற்கான முதல் கட்ட தேர்வு செப்டம்பர் இறுதியில் நடத்தவும், இரண்டாம், முன்னாம் கட்ட தேர்வு நவம்பர் மற்றும் பிப்ரவரியில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. விண்ணப்பம் தொடங்கப்படும் நாள் 11.06.2025, விண்ணப்பிக்க கடைசி நாள் 25.06.2025, முதல் கட்ட எழுத்துத் தேர்வு செப்டம்பர் 2025, இரண்டாம் கட்ட தேர்வு நவம்பர் முதல் பிப்ரவரி 2026, மூன்றாம் கட்ட தேர்வு பிப்ரவரி 2026 முதல் ஜூலை 2026 நடைபெறும். இந்திய பாதுகாப்பு துறையின் கீழ் பணியில் சேர வேண்டும் என விரும்புகிறவர்களுக்கு கடலோர காவல்படை தேர்விற்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

தலைப்பு செய்திகள்

62 மத்திய அரசு பணியிடங்கள்... செப்.15 வரை விண்ணப்பிக்கலாம்: எங்கு தெரியுங்களா?
62 மத்திய அரசு பணியிடங்கள்... செப்.15 வரை விண்ணப்பிக்கலாம்: எங்கு தெரியுங்களா?
ஒரே அறிவிப்பில் 19,000+ வங்கி வேலைகள்! இலவசமாக பயிற்சி பெற இப்போதே அறிய வாய்ப்பு..!
ஒரே அறிவிப்பில் 19,000+ வங்கி வேலைகள்! இலவசமாக பயிற்சி பெற இப்போதே அறிய வாய்ப்பு..!
இந்தியன் ஆயில் வேலைவாய்ப்பு: ரூ.1.6 லட்சம் சம்பளம்! செப்.3 கடைசி நாள்! விபரம் இதோ.
இந்தியன் ஆயில் வேலைவாய்ப்பு: ரூ.1.6 லட்சம் சம்பளம்! செப்.3 கடைசி நாள்! விபரம் இதோ.
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
Hybrid SUV: இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
Embed widget