10 நிமிடத்திற்கு 25 கோடியா! பவன் கல்யாணின் 'ஹரி ஹர வீர மல்லு' பற்றி இயக்குநர் அதிர்ச்சி தகவல்
பவன் கல்யாண் நடித்துள்ள ' ஹரி ஹர வீர மல்லு' படத்தில் மொத்தம் 6 ஆயிரம் வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்

மீண்டும் ஒத்திப்போன 'ஹரி ஹர வீர மல்லு' ரிலீஸ்
ஆந்திரா முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு முன்பாக பவன் கல்யாண் மூன்று படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்தார். ஓ.ஜி . பகத் சிங் , ஹரிஹர வீர மல்லு. இதில் ஹரிஹர வீர மல்லு படம் கடந்த 2020 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. கிரிஷ் ஜகர்லாமுடி மற்றும் ஜோதி கிருஷ்ணா இப்படத்தை இயக்கியுள்ளார்கள். பாபி தியோல் மற்றும் நிதி அகர்வால் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். 17 ஆம் நூற்றாண்டில் முகலாயர்களிடம் இருந்து கோஹினூர் வைரத்தை திருப்பி எடுத்துவர முயற்சி செய்த ஒருவரின் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது.
ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் ரிலீஸ் பல முறை ஒத்திவைக்கப் பட்டுள்ளது. ஜூன் 12 ஆம் தேதி படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மறுபடியும் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளார்கள். படக்குழு சார்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை வதந்திகளை நம்பாமல் ரசிகர்கள் பொறுமை காக்கும்படி தெரிவித்துள்ளனர். மேலும் ஹரி ஹர வீர மல்லு படத்தின் தொழில்நுட்ப அம்சங்கள் பற்றியும் படத்தின் இயக்குநர் பேசியுள்ளார்.
6000 வி.எஃப்.எக்ஸ் காட்சிகள்
" எந்த இந்திய படத்திலும் இல்லாத அளவிற்கு ஹரி ஹர வீர மல்லு படத்தில் மொத்தம் 6 ஆயிரம் வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்பாகவே ஒட்டுமொத்த படத்தையும் அனிமேஷன் செய்துவிட்டோம் . படத்தில் 2 மணி நேரத்திற்கு வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் இடம்பெறும். இந்த படத்தில் எந்த வித சமாதானமும் செய்துகொள்ள விரும்பவில்லை. கிளைமேக்ஸ் 10 நிமிடத்திற்கு மட்டுமே ரூ 25 கோடி செலவு செய்திருக்கிறோம். பெரிய திரையில் இந்த படத்தைப் பார்த்தால் உங்களுக்கு தெரியும். நாங்கள் உருவாக்கியிருக்கும் சினிமேட்டிக் அனுபவம் நிச்சயம் பார்வையாளர்களை வேறு ஒரு உலகத்திற்கு அழைத்துச் செல்லும் " என படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்
#HariHaraVeeraMallu 🦅🔥
— Trend PSPK (@TrendPSPK) June 11, 2025
According to director @amjothikrishna, the film has around 6000 VFX shots, a record for an Indian film. Much before the shooting began, we had shot the entire film in animation for previsualization. Every VFX shot has 10 layers. We don’t want to… pic.twitter.com/9gL8tcnLIR





















