John Spencer on Operation Sindoor: அட இதுவல்லவோ பாராட்டு - ‘ஆபரேஷன் சிந்தூர்‘ - அமெரிக்க ராணுவ முன்னாள் அதிகாரி சொல்வது என்ன?
ஆபரேஷன் சிந்தூர் வெற்றியடைந்ததாக நாம் கூறுவது பெரிய விஷயமல்ல. ஒரு அமெரிக்க முன்னாள் ராணுவ அதிகாரியும், நகர்ப்புற பேர் ஆய்வுகளின் தலைவராகவும் உள்ள ஒருவர் புகழாரம் சூட்டியுள்ளார். அவர் கூறியது என்ன.?

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் ஒரு மாபெரும் வெற்றி எனவும், தீவிரவாதிகளை அழிப்பதில், திட்டமிட்டதற்கு மேல் செயலாற்றியுள்ளதாகவும் புகழாரம் சூட்டியுள்ளார், அமெரிக்க ராணுவ முன்னாள் அதிகாரியான ஜான் ஸ்பென்சர். அவர் யார்.? அவர் என்ன கூறியுள்ளார்.? பார்க்கலாம்.
யார் இந்த ஜான் ஸ்பென்சர்.?
ஜான் ஸ்பென்சர், அமெரிக்க ராணுவத்தின் முன்னாள் அதிகாரியும், நகர்ப்புற போர் ஆராய்ச்சியாளர் மற்றும் எழுத்தாளரும் ஆவார். தற்போது இவர், நவீன போர் பயிற்சியகத்தில் நகர்ப்புற போர் ஆய்வுகளின் தலைவராகவும், நகர்ப்புற போர் திட்டத்தின் துணை இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார்.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து கட்டுரை எழுதிய ஜான் ஸ்பென்சர்
பாகிஸ்தானில் உள்ள அந்நாட்டு அரசின் ஆதரவுபெற்ற தீவிரவாதிகளை அழிக்க, இந்தியா சமீபத்தில் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் குறித்து, ஜான் ஸ்பென்சர் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். உலக அளவில் பிரசித்தி பெற்ற அவரது கட்டுரை, மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. அந்த கட்டுரையில் அவர் என்ன கூறியுள்ளார் என்பதை பார்க்கலாம்.
“ஆபரேஷன் சிந்தூர்: நவீன யுகத்தின் தீர்க்கமான வெற்றி“
ஆபரேஷன் சிந்தூர்: நவீன யுகத்தின் தீர்க்கமான வெற்றி என்று தலைப்பிடப்பட்ட அந்த கட்டுரையின் தொடக்கத்திலேயே, ஆபரேஷன் சிந்தூர் முழுமையாக முடிந்துவிட்டதாக இந்தியா அறிவிக்கவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், இப்போது இருப்பது ஒரு முக்கியமான நிறுத்தம் என குறிப்பிட்டுள்ளார்.
சிலர் இதை போர் நிறுத்தம் என அழைக்கலாம், ஆனால் ராணுவத் தலைவர்கள் அந்த வார்த்தையை வேண்டுமென்றே தவித்த்துவிட்டதாகவும், போர் கண்ணோட்டத்தில் இது ஒரு இடைநிறுத்தம் மட்டுமல்ல, இது ஒரு அரிய மற்றும் தெளிவற்ற ராணுவ வெற்றியைத் தொடர்ந்த ஒரு மூலோபாய பிடிப்பு என கூறியுள்ளார்.
4 நாட்கள் அளவீடுடன் கூடிய ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு, அது புறநிலை ரீதியாக முடிவானது. இந்தியா மகத்தான வெற்றியை பெற்றது. ஆபரேஷன் சிந்தூர் அதன் மூலோபாய நோக்கங்களையும், அதனை மிஞ்சியை வெற்றியையும் பெற்றுள்ளது. தீவிரவாதிகளின் உட்கட்டமைப்பை அழித்தது, ராணுவத்தின் மேன்மையை பறைசாற்றியது, தடுப்பை மீட்டெடுத்தல் மற்றம் புதிய தேசிய பாதுகாப்பு கோட்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறியுள்ள அவர், இந்த சக்தி ஒரு குறியீடு அல்ல, அது தீர்க்கமான சக்தியாக இருந்தது, தெளிவாகவும் பயன்படுத்தப்பட்டது என, இந்திய ராணுவ நடவடிக்கை குறித்து அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஆனால், முந்தைய தாக்குதல்களைப் போல் அல்லாமல், இந்த முறை இந்தியா காத்திருக்கவில்லை என்றும், அது சர்வதேச மத்தியஸ்தத்திற்கு முறையிடாமல் அல்லது ரு ராஜதந்திர எல்லையை வெளியிடாமல், பேர் விமானங்களை ஏவியது என ஜான் குறிப்பிட்டுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் என்பது ஆக்கிரமிப்போ அல்லது ஆட்சி மாற்றம் பற்றியதோ அல்ல. அது ஒரு குறிப்பிட்ட நோக்கங்களுக்காக நடத்தப்பட்ட வரையறுக்கப்பட்ட போர். மூலோபாய வெற்றி என்பது அழிவுகளை ஏற்படுத்தியதன் அளவை பற்றியது அல்ல, அது விரும்பிய அரசியல் விளைவை அடைவது பற்றியது எனவும், இந்தியா பழிவாங்குவதற்காக போரிடவில்லை, தடுப்புக்காகவே போரிட்டது, அது வேலையும் செய்தது எனவும் ஜான் ஸ்பென்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் கட்டுப்பாடு அதன் பலவீனம் அல்ல, அது முதிர்ச்சி எனவும், அது செலவுகளை விதித்தது, வரம்புகளை மறுவரையறை செய்தது மற்றும் விரிவாக்க மேலாதிக்கத்தை தக்கவைத்துக் கொண்டது என்று கூறியுள்ளார். மேலும், இந்தியா தாக்குதலுக்கு மட்டும் பதிலடி கொடுக்கவில்லை, இது மூலோபாய சமன்பாட்டை மாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.
நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளது, ஆபரேஷன் சிந்தூரின் முடிவு அல்ல எனவும், இது தற்காலிகமான நிறுத்திவைப்பு எனவும், மீண்டும் சீண்டப்பட்டால், இந்தியா மறுபடியும் தாக்கும் என ஜான் குறிப்பிட்டுள்ளார்.
மொத்தத்தில், ஆபரேஷன் சிந்தூர் ஒரு நவீன யுத்தம். அணுசக்தி விரிவாக்கத்திற்கான நிழலின் கீழ், உலகளாவிய கவனத்துடன் மற்றும் ஒரு வரையறுக்கப்பட்ட புறநிலை கட்டமைப்பிற்குள் போர் நடத்தப்பட்டது என ஜான் தெரிவித்துள்ளார். முக்கியமான ஒவ்வொரு அளவிலும், இது ஒரு மூலோபாய வெற்றி மற்றும் ஒரு தீர்க்கமான இந்திய வெற்றி எனவும் ஜான் ஸ்பென்சர் இந்தியாவிற்கு புகழாரம் சூட்டியுள்ளார்.





















