(Source: SAS Group)
Karthigai Deepam: ரோகிணி கர்ப்பம்... சாமுண்டீஸ்வரி தலையில் இடியை இறக்கிய ஜோசியர்! கார்த்திகை தீபம் அப்டேட்!
நேற்று ரோகினி கர்ப்பம் என ஒரு பக்கம் தெரிய வர இன்று என்ன நடக்கும் என்பதை பார்ப்போம்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி தோறும் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் முக்கிய சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் ஜோசியர் ரோஹிணிக்கு பிறக்கும் குழந்தை தான் இரண்டு குடும்பத்தையும் சேர்த்து வைக்கும் என்று சொல்லிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, ரோகினி கர்ப்பம் என தெரிந்ததும் எல்லாரும் சந்தோசமாக வீட்டிற்கு வர, சாமுண்டீஸ்வரி ஜோசியரை பார்த்தேன், நீ குழந்தை எல்லாம் பெத்துக்காத என்று சொல்ல ரோகினி மற்றும் மயில்வாகனம் அதிர்ச்சி அடைகின்றனர். கர்ப்பம் குறித்து சொல்லாமல் மறைக்க முடிவெடுக்கிறார்கள்.

இதையடுத்து ரூமில் கார்த்திக் ரேவதி மயில்வாகனம் ஆகியோர் இருக்க ரோகினி கர்ப்பம் என்ற விஷயத்தை எப்படி சொல்லாமல் இருப்பது என கலங்கியபடி பேசுகிறாள். அதே நேரத்தில் மயில்வாகனம், ரோகினி ஆகியோர் இந்த குழந்தை வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். அடுத்த நாள் ஒரு குடும்பம் சாமுண்டீஸ்வரியை சந்திக்க வந்து, துர்காவை பெண் கேட்கின்றனர். உங்களுடைய கண்டிஷன் எல்லாத்துக்கும் சம்மதம் என்று சொல்ல சந்திரகலா எனக்கு என்னமோ இந்த சம்மந்தம் சரியா வரும்னு தோணுது என்று சாமுண்டீஸ்வரியை ஏற்றி விடுகிறாள்.
துர்கா சாமுண்டீஸ்வரியை தனியாக அழைத்து இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் என்று சொல்ல சாமுண்டீஸ்வரி எனக்கு என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும் என சொல்லி விடுகிறாள். இந்த சம்மந்தத்துக்கும் சம்மதம் சொல்கிறாள். அதன் பிறகு தான் இது சிவனாண்டி, முத்துவேல் பிளான் என தெரிய வருகிறது.

அடுத்து துர்கா நவீனுக்கு தகவல் சொல்ல... அவன் நாளைக்கு கோவிலில் உனக்காக காத்திருப்பேன். நீ வந்தா நாம கல்யாணம் பண்ணிக்கலாம் என்று சொல்கிறான். அடுத்த நாள் சாமுண்டீஸ்வரி துர்காவிடம் ஒரு புடவையை கொடுத்து நிச்சயத்துக்கு தயாராக சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.





















