மேலும் அறிய

Air India Black Box: சீக்கிரமே உண்மை தெரிஞ்சுடும் - விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்பு

Air India Flight Black Box: அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் இன்னும் முழுமையாக தெரியாத நிலையில், தற்போது கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் உண்மையான காரணம் தெரியவரும்.

அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட விமானம் விபத்திற்குள்ளாகி, அதில் பயணித்த 242 பேரில், 241 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கான உண்மையான காரணம் இன்னும் தெரியாத நிலையில், அந்த விமானத்தின் கருப்புப் பெட்டி தற்போது மீட்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் உண்மை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விபத்திற்குள்ளான ஏர் இந்தியா விமானம்

அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்திலிருந்து லண்டனை நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், அடுத்த சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்து, மேகானி நகரில் உள்ள பிஜே மருத்துவ கல்லூரி மருத்துவர்களின் குடியிருப்பு கட்டிடத்தின் மீது விழுந்து நொறுங்கி தீப்பற்றி எரிந்தது. இதனால் பல நூறு அடி உயரத்திற்கு கரும்புகை எழுந்தது.

இந்த விபத்தில், விமானத்தில் பயணித்த 242 பேரில், ஒருவரைத் தவிர மற்ற அனைவரும், அதாவது 241 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். அதுமட்டுமல்லாமல், பிஜே மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த பலரும் உயிரிழந்ததோடு, ஏராளமானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம்

அகமதாபாத்தில் விபத்திற்குள்ளானது போயிங் 787-8 ட்ரீம்லைனர் ரக விமானம். இந்த போயிங் 787 ட்ரீம்லைனர் என்பது, விமான நிறுவனங்களால் கண்டங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு பயன்படுத்தப்படும் நீண்ட தூர விமானமாகும். இதன் முதல் பயணம் அக்டோபர் 26, 2011 அன்று டோக்கியோவின் நரிட்டாவிலிருந்து ஹாங்காங்கிற்கு ஆல் நிப்பான் ஏர்வேஸ் விமானம் மூலம் நடைபெற்றது. அதன்பிறகு, 14 ஆண்டுகளுக்குள் 1 பில்லியனுக்கும் அதிகமான பயணிகள் 787 ட்ரீம்லைனர் விமானத்தில் பயணித்துள்ளனர்.  

2011-ம் ஆண்டு சேவையில் நுழைந்ததிலிருந்து, ட்ரீம்லைனர் விமானம் எந்த உயிரிழப்பு ஏற்படும் அளவிற்கான விபத்துகளையும் எதிர்கொண்டதில்லை என்ற பெருமை பெற்றிருந்தது. ஆனால், அகமதாபாத் விபத்து மூலம் அது முடிவுக்கு வந்துள்ளது. போயிங் 787 சீரிஸில் தற்போது 3 மாடல்கள் உள்ளன. அதில், போயிங் 787-8 தான் மிகச் சிறியது மற்றும் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் மாடல் ஆகும். இந்த மாடல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து போயிங் 2,500-க்கும் மேற்பட்ட 787 ரக விமானங்களை விற்றுள்ளது. அதில், 47 விமானங்களை ஏர் இந்தியா வாங்கியுள்ளது.

விபத்திற்கான காரணமாக நிபுணர்கள் கூறுவது என்ன.?

இப்படிப்பட்ட சூழலில், இதுவரை கிடைத்த வீடியோ காட்சிகளின் அடிப்படையில், ஏர் இந்தியா விமானத்தின் இரண்டு இன்ஜின்களிலும் உந்துவிசை இல்லாதது மற்றும் பறவை மோதியது ஆகியவை விபத்திற்கான சாத்தியமான காரணங்களாக இருக்கலாம் என்று விமான நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆனாலும், இவை எல்லாம், அவர்களின் அனுபவங்கள் மற்றும் யூகங்களின் அடிப்படையில் கூறப்படுவது தான். இந்த விபத்திற்கான உண்மையான காரணம் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில், விமானத்தின் கருப்புப் பெட்டி கிடைத்தால், அதிலிருந்து பல தகவல்கள் வெளியாகும் என கூறப்பட்டது.

மீட்கப்பட்ட கருப்புப் பெட்டி

இந்த நிலையில், விபத்திற்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி தற்போது மீட்கப்பட்டுள்ளது. விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்த மருத்துவக் கல்லூரி விடுதியின் மேற்கூரையிலிருந்து இந்த கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது. இதன் மூலம், விரைவில் விபத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என தகவல் வெளியாகியுள்ளது.

தலைப்பு செய்திகள்

எப்படியெல்லாம் வளர்த்திருப்பாரு.. அப்பா இறப்புக்கு வராத மகள்கள்.. விளாசிய நெட்டிசன்கள்!
எப்படியெல்லாம் வளர்த்திருப்பாரு.. அப்பா இறப்புக்கு வராத மகள்கள்.. விளாசிய நெட்டிசன்கள்!
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?
இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?
எல்பிஜி தட்டுப்பாடு: எரிவாயு சேமிப்புக்கு சிலிண்டரில் ரூ.18 கூடுதல் கட்டணமா?விபரம் இதோ..
எல்பிஜி தட்டுப்பாடு: எரிவாயு சேமிப்புக்கு சிலிண்டரில் ரூ.18 கூடுதல் கட்டணமா?விபரம் இதோ..

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget