(Source: ECI | ABP NEWS)
அரசியை கொள்ள துடிக்கும் குமரவேல் - இதை செய்தது யார்? அலசும் அண்ணன் அண்ட் தம்பி! பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்று அரசிக்கும், குமரவேலுவிற்கும் சண்டை வந்து, அரசி கழுத்தை நெரிக்கும் அளவிற்கு குமரவேல் சென்ற நிலையில் என்ன நடக்கும் என்பதை பார்ப்போம்.

'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் இன்றைய 505ஆவது எபிசோடில் தங்கமயில் தனது வீட்டில் இருந்தால் நம்ம சாப்பாட்டிற்கு கஷ்டம் வந்துவிடும் என்று கருதிய பாக்கியம் அவரை 2 நாட்களுக்குள்ளாக வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கட்டளை போடுகிறார். இதனால் மன வேதனையுடன் சரவணன் வேலை செய்யும் கடைக்கு வந்த மயில், அவருக்கு போன் போட்டு பார்த்துள்ளார். ஆனால் போனை எடுக்கவில்லை. திரும்ப கடையில் வேலை பார்க்கும் ஒருவரது போனிலிருந்து போன் போடவும் எடுத்து பேசிய சரவணன் தங்கமயில் பேசுவதாக கூறியதைத் தொடர்ந்து உடனே போனை கட் செய்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் முத்துவேல் வீட்டிலிருந்து கணக்கில் வராத பணத்தையும், ஆவணங்களையும் எடுத்துச் செல்லும் காட்சிகள் காட்டப்படுகிறது. அதுமட்டுமின்றி இது குறித்த செய்தி டிவி, பேப்பர் என்று எல்லாவற்றிலும் வெளியாகிவிட்டது. அதோடு போலீஸ் தங்களை கைது செய்யப்பட இருப்பதாக முத்துவேல் மற்றும் சக்திவேல் இருவரும் புலம்பிக் கொண்டிருக்கும் போது, எல்லாம் வீட்டிற்கு மருமகள் வந்த நேரம் சரியில்லை என்று சக்திவேல் அரசி மீது பழி சுமத்துகிறார்.

இதை கேட்ட காந்திமதி தனது பேத்திக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார். அதே போன்று குமரவேலுவும் பழி சொல்லவே எல்லோரும் அவரை சகட்டுமேனிக்கு திட்டுகிறார்கள். இதெல்லாம் ஒருபுறம் இருக்க, மொத்த பணத்தையும் வீட்டில் வைக்க வேண்டாம் என்று நான் ஏற்கனவே பல முறை சொல்லியிருக்கேன். ஆனால், அதையெல்லாம் யாரும் கேட்கவில்லை. இப்போது டிவி, நியூஸ், மொபைல் என்று எல்லாவற்றிலும் வெளிச்சம் போட்டு காட்டிய நிலையில் நாளை பேப்பரிலும் வந்துவிடும் என்று முத்துவேல் பயந்து கொண்டிருக்கிறார்.
அப்படியிருக்கும் போது ஏண்டா போலீஸ் பிடிக்கும் அளவிற்கு பெரிய தரை செய்திருக்கீங்க என்று காந்திமதி கேட்க, ஆத்தா நீ சும்மா இரு என்று அவரின் வாயை அடைகிறார் சக்திவேல். இதைத் தொடர்ந்து அரசிக்கும் இந்த வருமான வரித்துறை சோதனைக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவளுக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று குமரவேல் தனது அப்பாவிடம் சொல்லி கொண்டிருக்கிறார். அதோடு நமக்கு தான் எல்லா இடங்களிலும் விரோதிகள், எதிரிகள் என்று நிறைய பேர் இருக்காங்களே.
முதலில் இதைப் பற்றி அவர்களுக்கு சொன்னது யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று தனது தம்பி சக்திவேலுவிடம் முத்துவேல் கூறுகிறார். ஆனால் மீனா தான் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு போன் போட்டு சொன்னது என்று முத்துவேல், சக்திவேலுவிற்கு தெரியவந்தால் பூகம்பம் வெடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இது ஒரு புறம் இருக்க மீனாவிடம், செந்தில் உன்னுடைய அப்பாவிடம் அரசு வேலைக்கு ரூ.10 லட்சம் கொடுத்திருக்கிறேன் என்று வெளிப்படையாக கூறவே அதிர்ச்சி அடைந்த மீனா இதை முதலில் மாமாவிடம் சொல்லிவிடுங்கள் என அவரை திட்டுகிறார். இதன்காரணமாக இருவருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்படுகிறது. இறுதியாக அரசி மற்றும் குமரவேல் இருவருக்கும் இடையில் சண்டை வரவே கோபத்தின் உச்சத்திற்கு சென்ற குமரவேல் அரசியின் கழுத்தை நெரித்து கொலை செய்யும் அளவிற்கு துணிகிறார். அதோடு இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் எபிசோடு முடிவடைகிறது.
இனி நாளைய எபிசோடில் அரசி மற்றும் குமரவேல் தொடர்பான சண்டைக் காட்சிகளும், செந்தில் மற்றும் மீனா தொடர்பான காட்சிகளும் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





















