TNPSC: அடுத்த அரசு வேலைக்கு அறிவிப்பு வந்தாச்சு; 1910 காலி இடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?- டிஎன்பிஎஸ்சி அழைப்பு
2025-ம் ஆண்டு ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (பட்டயம், தொழிற்பயிற்சி நிலை) மூலம் 1910 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் உள்ள தொழில்நுட்ப உதவியாளர் (மின்னியல்) உள்ளிட்ட 58 பதவிகளுக்கான 1910 காலிப் பணியிடங்களை நிரப்ப, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான (பட்டயம்,தொழிற்பயிற்சி நிலை). அறிவிக்கை, இன்று (13.06.2025) வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஆண்டுத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ள அதே நாளில் அறிவிக்கை வெளியாகி உள்ளது.
முக்கியத் தேதிகள் என்னென்ன?
தேர்வர்கள் இன்று (13.06.2025) முதல் 12.07.2025 வரை இணைய வழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் ஜூலை 16 முதல் 18ஆம் தேதி வரை மேற்கொள்ளலாம். அதேபோல தேர்வர்கள் தேர்வுக் கட்டணத்தை யுபிஐ மூலமாகவும் செலுத்தலாம்.
தேர்வு, ஓஎம் ஆர் அல்லது கணினி வழித் தேர்வு முறையில்31.08.2025, 07.09.2025 மற்றும் 11.09.2025 முதல் 15.09.2025 வரை நடைபெறும்.
தமிழ் தகுதித் தேர்வு, General Studies and Aptitude and Mental Ability தேர்வு ஆகஸ்ட் 31ஆம் தேதியும் பாடத் தாள்களுக்கான தேர்வுகள் 07.09.2025 மற்றும் 11.09.2025 முதல் 15.09.2025 வரையும் நடைபெற உள்ளன.
தேதி தவறாத டிஎன்பிஎஸ்சி
தொடர்ச்சியாக 12-வது முறையாக தேர்வாணையத்தின் ஆண்டுத் திட்டத்தில் குறிப்பிட்ட தேதியில் தேர்விற்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் தவறாமல் வெளியிடப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (பட்டயம், தொழிற்பயிற்சி நிலை) 2024-ம் ஆண்டு அறிவிக்கையில், இரண்டு நிதியாண்டுகளுக்கான 2022 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதாவது, ஒரு நிதியாண்டிற்கு சராசரியாக 1011 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளான.
2024ஆம் ஆண்டிற்கான அறிவிக்கையோடு ஒப்பிடும்போது. 2025-ம் ஆண்டு ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (பட்டயம், தொழிற்பயிற்சி நிலை) மூலம், ஒரு நிதியாண்டிற்கு (2025 - 2026) 1910 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம்
மேலும், 2025ம் ஆண்டு அறிவிக்கையில் வெளியிடப்பட்ட காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அரசுத் துறை , நிறுவனங்களிடம் இருந்து அதிகரித்து பெறப்படும் பட்சத்தில், கலந்தாய்விற்கு முன்பாக மேலும் அதிகரிக்கப்படும், எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
மின் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த அறிவிக்கையை முழுமையாகக் காண https://tnpsc.gov.in/Document/english/CTS%20-%20Diploma,%202025%20Final%20English_.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டியது முக்கியம்.






















