மேலும் அறிய
Governor RN Ravi : மனைவியுடன் ஸ்ரீரங்கம் கோயிலை சுத்தம் செய்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!
Governor RN Ravi : “கோயில்களை தூய்மையாக பராமரிப்பதில் கோயில் நிர்வாகத்திற்கு மட்டுமல்ல பக்தர்களுக்கும் பெரும்பங்கு உண்டு.” - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநர் ஆர்.என்.ரவி மனைவியுடன் கோயிலை சுத்தம் செய்தபோது
1/5

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் தரிசனம் செய்வதற்காக இன்று ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வந்தார்.
2/5

அவருக்கு கோவில் சார்பாக பூரண கும்ப மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அவருக்கு அங்கு இருந்த பக்தர்கள் வரவேற்பு அளித்தனர்.
3/5

இதனைத் தொடர்ந்து அவர் மூலவர் சன்னதியில் சாமி தரிசனம் செய்தார். பின்னர், தாயார் சன்னதி வந்து தாயாரை வழிபட்டார்
4/5

கோயில் நிர்வாகம் சார்பாக, பள்ளிகொண்ட ரங்கநாதரின் திருவுருவப்படம் பரிசாக கொடுக்கப்பட்டது
5/5

கோவில் முன்புறமுள்ள குப்பைகளை தூய்மை செய்யும் பணியில் அவரும் அவரது மனைவியும் ஈடுபட்டனர். ஸ்ரீமேட்டழகிய சிங்கர் சன்னதி படிக்கட்டுகளை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்தார்.
Published at : 17 Jan 2024 01:39 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
வணிகம்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion