மேலும் அறிய
Paruppu Keerai Kadaiyal:சத்தான பருப்பு கீரை கடையல் செய்வது எப்படி?ரெசிபி!
Paruppu Keerai Kadaiyal: இந்த பருப்பு கீரை கடையலை சாதத்துடன் நெய் சேர்த்து அப்படியே சாப்பிடலாம். சுவை அட்டகாசமாக இருக்கும்.

பருப்பு கீரை கடையல்
1/6

தேவையான பொருட்கள்: கீரை - 1 கட்டு, துவரம் பருப்பு - 1 கப், வெங்காயம் - 1 , தக்காளி - 3 , பூண்டு பல் - 5 , பச்சை மிளகாய் - 2 , புளி, மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன், கல்லுப்பு - 1 டீஸ்பூன், மிளகாய் தூள்- 2 டீஸ்பூன், தண்ணீர், நெய் - 1 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு- 1 டீஸ்பூன், கடுகு - 1 தேக்கரண்டி, சீரகம் – 1 டீஸ்பூன், பூண்டு பல் -5 , சிவப்பு மிளகாய் - 2 , கறிவேப்பிலை, பெருங்காய தூள் - 1/4 டீஸ்பூன்
2/6

செய்முறை: முதலில் ஊறவைத்த பருப்பு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு பல், புளி, மஞ்சள்தூள், உப்பு, மிளகாய் தூள் அனைத்தையும் பிரஷர் குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நான்கு முதல் ஐந்து விசில் வரும் வரை காத்திருக்கவும்.
3/6

அதன் பிறகு மத்தை வைத்து பருப்பு கீரையை நான்கு கடைந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
4/6

அதன்பிறகு ஒரு கடாயில் நெய் ஊற்றி சூடானதும் அதில் உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம் சேர்த்து வறுக்கவும்.
5/6

கடுகு பொரிந்ததும், சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை,பெருங்காயம் மற்றும் தட்டிய பூண்டு பல் சேர்த்து வதக்கவும்.
6/6

அதனுடன் வெந்த பருப்பு, கீரை கலவையை சேர்த்து 5 நிமிடத்திற்கு கொதிக்கவைத்து இறக்கினால் சுவையான பருப்பு கீரை கடையல் தயார்.
Published at : 21 Jul 2024 11:02 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
நிதி மேலாண்மை
Advertisement
Advertisement