30 கிராம் தங்கம்! உலகின் காஸ்ட்லியா கிரிக்கெட் ஜெர்சி.. விலை எவ்வளவு தெரியுமா?
இந்த ஜெர்சி 30 கிராம், 20 கிராம் மற்றும் 10 கிராம் பதிப்புகளில் கிடைக்கிறது. மேலும் இதன் விலை சுமார் ரூ.3 லட்சம் என்று கூறப்படுகிறது

மேற்கிந்திய தீவுகள் சாம்பியன்ஸ் அணி உலகின் மிக விலையுயர்ந்த கிரிக்கெட் ஜெர்சியை அணிய உள்ளது. இந்த ஜெர்சியை மேற்கிந்திய தீவுகள் அணியின் சிறந்த வீரர்களான டுவைன் பிராவோ, கீரோன் பொல்லார்ட் மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகியோர் அறிமுகப்படுத்தினர். இந்த ஜெர்சி 18 காரட் தங்கத்தால் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் சாம்பியன்ஸ் அணி உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் போட்டியில் இந்த ஜெர்சியை அணிந்து விளையாடும். இந்த போட்டி ஜூலை 18 ஆம் தேதி தொடங்கியது. இந்த லீக் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை நடைபெறும்.
இந்த ஜெர்சியை துபாயின் லோரென்ஸ் குழுமம், சேனல் 2 குழுமத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. மேற்கிந்திய தீவுகளின் ஜாம்பவான்கள் உலக சாம்பியன்ஸ் ஆஃப் லெஜண்ட்ஸ் போட்டியில் இதை அணிவார்கள். இந்த ஜெர்சி மேற்கிந்திய தீவுகளின் ஜாம்பவான்களான சர் கிளைவ் லாயிட் முதல் கிறிஸ் மற்றும் நவீன ஜாம்பவான்கள் வரை நினைவாக தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஜெர்சி மேற்கிந்திய தீவுகள் அணிக்காக 18 காரட் தங்கத்தில் சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஜெர்சி 30 கிராம், 20 கிராம் மற்றும் 10 கிராம் பதிப்புகளில் கிடைக்கிறது. மேலும் இந்த ஜெர்சியின் விலை சுமார் ரூ.3 லட்சம் என்று கூறப்படுகிறது
Gayle, Pollard among West Indies Champions to don most expensive jersey in Cricket history made of 30gms of Gold. 🤯
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 18, 2025
- Dubai-based Lorenze made the Jersey in partnership with Channel2 Group. pic.twitter.com/8IOKfKeKpy
மேற்கிந்திய தீவுகள் சாம்பியன்ஸ் அணி சனிக்கிழமை முதல் உலக சாம்பியன்ஸ் ஆஃப் லெஜண்ட்ஸ் போட்டியின் தனது முதல் ஆட்டத்தில் விளையாட உள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணி தென்னாப்பிரிக்கா சாம்பியன்களை எதிர்கொள்ளும். இந்த முறை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு கிறிஸ் கெய்ல் தலைமை தாங்குவார்.
இந்த போட்டியில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன. இதில் இந்தியா சாம்பியன்ஸ், ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ், பாகிஸ்தான் சாம்பியன்ஸ் மற்றும் இங்கிலாந்து சாம்பியன்ஸ் ஆகியவை அடங்கும். பல சிறந்த வீரர்கள் இந்த போட்டியில் விளையாடுவதைக் காணலாம். இதில் சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், பிரட் லீக் இயோன் மோர்கன் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோரின் பெயர்கள் அடங்கும்.
மேற்கிந்திய தீவுகள் சாம்பியன்ஸ் அணி:
கிறிஸ் கெய்ல் (கேப்டன்), கீரோன் பொல்லார்ட், டுவைன் பிராவோ, லென்டில் சிம்மன்ஸ், டுவைன் ஸ்மித், ஷெல்டன் கோட்ரெல், ஷிவ்நரைன் சந்தர்பால், சாட்விக் வால்டன், ஷானன் கேப்ரியல், ஆஷ்லே நர்ஸ், பிடல் எட்வர்ட்ஸ், வில்லியம் பெர்கின்ஸ், சுலைமான் பென், டேவ் முகமது, நிகிதா மில்லர்.





















