TVK Prashant Kishor: தவெகவை கழற்றிவிட்ட பிரசாந்த் கிஷோர்! ஆதவ் அர்ஜூனாவின் உள்ளடி வேலை? அதிர்ச்சியில் தொண்டர்கள்
ஆதவ் அர்ஜூனா, கடந்த சில மாதங்களில் தனது நெருக்கமான நபர்களை தவெக கட்சியின் முக்கிய பதவிகளில் அமர்த்தியதாக கூறப்படுகிறது.

தமிழக அரசியலில் புதிய திருப்பமாக, பிரசாந்த் கிஷோர் தவெகவின் தேர்தல் ஆலோசகராக இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் தவெகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
பிரசாந்த் கிஷோர்:
ஜன்சுராஜ் கட்சி தலைவர் மற்றும் இந்தியாவின் முன்னணி தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் கடந்த சில மாதங்களாக தவெகவுக்கு அரசியல் ஆலோசகராக பணியாற்றி வந்தார். Simple Sense Analytics நிறுவனத்தின் மூலம் அவரது குழுவினர் தவெக தேர்தல் வேலைகளில் நேரடியாக ஈடுபட்டனர்
ஆனால், சமீபத்தில் இந்த குழுவின் பலர் ஆதவ் அர்ஜுனாவின் Voice of Common நிறுவனத்திற்கு மாற துவங்கியுள்ளனர். அதே நேரத்தில், மற்றொரு தேர்தல் வியூக நிபுணரான ஜான் ஆரோக்கியசாமி தொடர்ந்து தவெக கட்சிக்காக வேலை செய்து வருகிறார்.
ஆத்வ் அர்ஜூனாவின் தலையீடு:
ஆதவ் அர்ஜூனா, கடந்த சில மாதங்களில் தனது நெருக்கமான நபர்களை தவெக கட்சியின் முக்கிய பதவிகளில் அமர்த்தியதாக கூறப்படுகிறது. அதில், புதிய இளைஞர்களையும், சமூக ஆர்வலர்களையும் சந்தித்து அவர்களை தேர்வு செய்யும் பணியை தீவிரப்படுத்தியுள்ளார்.
மேலும் தவெகவில் தற்போது ஆலோசனைகள், முடிவெடுத்தல் என அனைத்திலும் ஆதவ் அர்ஜூனா குழுவுக்கு அதிக தாக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பிரசாந்த் கிஷோரின் குழுவின் ஆலோசனைகளை கட்சிக்குள் எடுப்படாத நிலை உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஆதவ் அர்ஜூனாவின் தலையீடு அதிகம் உள்ளதால் பிரசாந்த் கிஷோர் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது
பிரசாந்த் கிஷோர் விலகல்:
இந்த நிலையில் தான் தவெகவின் ஆலோசராக செயல்படுவதில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளர் பிரசாந்த் கிஷோர். பீகார் சட்டமன்ற தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருவதால் தவெகவின் ஆலோசகராக செயல்பட முடியவில்லை என்றும் விஜய்-க்கு ஆலோசகராக இருப்பது குறித்து பிறகு முடிவு செய்வேன் என்று கூறியுள்ளார்.
கடந்த பிப்ரவரியில் விஜயுடன் மேடையை பகிர்ந்த பிரசாந்த் கிஷோர், “விஜய் ஒரு அரசியல் தலைவர் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் புதிய நம்பிக்கை” என பாராட்டினார். ஆனால் தற்போது அவர் தற்காலிக ஒதுங்கியிருப்பது, தவெக தலைமை மற்றும் கட்சி வளர்ச்சி குறித்து கேள்விகளை எழுப்புகிறது. தவெல என்பது தமிழ்நாட்டில் ஒரு புதிய அரசியல் மாற்றத்தை விரும்பும் கட்சி”என்று புகழ்ந்திருந்தார்
மீண்டும் வருவாரா பிரசாந்த் கிஷோர்?
பீகார் தேர்தல் பணி முடிந்ததும், பிரசாந்த் கிஷோர் மீண்டும் தவெகவுக்கு முழு நேர ஆலோசகராக திரும்புவாரா? என்கிற கேள்வி தவெகவினர் மத்தியில் எழுந்துள்ளது.






















