(Source: ECI | ABP NEWS)
வீட்டுக்குள் நுழைந்த பாம்பு.. மக்களை எச்சரித்த நடிகர் சோனு சூட்.. நடந்தது என்ன?
பாலிவுட் நடிகர் சோனு சூட் பாம்பை கையில் பிடித்திருக்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல இந்தி நடிகர் சோனு சூட், தனது வீட்டு வளாகத்திற்குள் வந்த பாம்பை கையில் பிடித்திருக்கும் புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் கள்ளழகர் படத்தில் வில்லனாக நடித்தார் சோனு சூட் இப்படத்தை தொடர்ந்து தெலுங்கு, இந்தி மொழிகளில் பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் கொராேனா காலத்தில் மக்களுக்கு செய்த உதவியை மறக்க முடியாது. தமிழில் ராகவா லாரன்ஸை போன்று பாலிவுட் சோனு சூட் இருக்கிறார்.
உதவி என்று கேட்கும் மக்களுக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி உதவி செய்து வருகிறார். அண்மையில் அளித்த பேட்டியில் விஜயகாந்த் குறித்து பேசியது வைரலானது. கள்ளழகர் படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பை அளித்தது விஜயகாந்த் தான். அவர் அன்று தந்த வாய்ப்பு தான் இன்று வரை நான் ஒரு நடிகனாக நிலைத்து நிற்கிறேன் என தெரிவித்தார். அவர் மாதிரி பண்பான மனிதரை பார்த்தது இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார். தென்னிந்திய மொழிகளில் நடிக்கவும் பிடிக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், நடிகர் சோனு சூட் தங்கியிருக்கும் வளாகத்தில் பாம்பு ஒன்று வந்துள்ளது. இதைப் பார்த்த அவர் கொஞ்சமும் பதற்றப்படாமல் அந்த பாம்பை வெறும் கைகளால் பிடித்து பைக்குள் அடைத்தார். இந்த வீடியோவை சமூகவலைதளத்தில் பகிர்ந்த அவர், இது ஒரு ஜெர்ரிபோட்டு வகை பாம்பு, அது விஷத்தன்மையற்ற பாம்பு அதனால் பயமில்லை. ஆனால், நீங்கள் என்னை போன்று கைகளால் பிடிப்பதை தவிர்க்க வேண்டும். வீட்டுக்குள் நுழையும் பாம்பை பிடிக்க நிபுணர்களை மட்டுமே அழைக்க வேண்டும். பாம்புகள் குறித்து விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். தற்பாேது இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
పామును పట్టిన #sonusood
— greatandhra (@greatandhranews) July 19, 2025
తన ఇంటి ప్రాంగణం వద్ద కనిపించిన పామును పట్టి సంచీలో వేశారు, ఆ పాము సంచిని తన సిబ్బందికి ఇచ్చి దానిని బయట వదిలేయమని చెప్పారు.
ఒక స్టార్ ఇలా పామును పట్టుకోవడంతో నెటిజన్లు ఆశ్చర్యపోతున్నారు. pic.twitter.com/7rc6Z3itJB





















