மேலும் அறிய
Curry Leaves Rice:லஞ்ச் பாக்ஸ் உணவு.. கருவேப்பிலை சாதம் ரெசிபி!
Curry Leaves Rice:சுவையான கறிவேப்பிலை சாதம் எப்படி செய்வதென்று பார்க்கலாம். ஆரோக்கியமான உணவு இது. லன்ச் பாக்ஸ் ரெசிபி லிஸ்ட்டில் இதை சேர்க்கலாம்.

கறிவேப்பிலை சாதம்
1/6

ஒரு பானை அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, அதில் அரை கப் கடலை பருப்பு, கருப்பு உளுத்தம் பருப்பு சேர்த்து நன்றாக வதங்கியதும்,நெல்லிக்காய் அளவு புளி சேர்க்கவும்.
2/6

அரை கப் வேர்க்கடலை, கால் கப் எள், கால் கப் சீரகம் ஆகியவற்றை சேர்த்து 30 நொடிகள் வறுத்து விட்டு 10 மிளகாய் சேர்த்து அனைத்தும் சிவக்கும்படி வறுக்க வேண்டும். இதனுடன் சிறிது பெருங்காய தூளும் சேர்த்துக்கொள்ள வேண்டும். வறுத்த பொருட்களை ஆற விடவும்.
3/6

இதே கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, 15 பூண்டு சேர்த்து பொன்னிறமாக இருக்கும்படி வறுக்கவும். கறிவேப்பிலை சேர்த்து இதனுடன் தேவையான அளவு உப்பு, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும்.
4/6

நாம் வறுத்து வைத்து கடலைப்பருப்பு உள்ளிட்ட பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் வறுத்து வைத்துள்ள கறிவேப்பிலையையும் சேர்த்து நன்றாக அரைத்து, இதனுடனேயே வறுத்த பூண்டையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது அரைத்த அனைத்து பொருட்களையும் நன்றாக கலந்துகொள்ள வேண்டும்.
5/6

சாதம் வடிக்கும் போதே அதில் சிறிது உப்பு போட்டு வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். வடித்த சாதத்தை ஒரு தட்டில் சேர்த்து விட்டு அதில் மூன்று ஸ்பூன் எண்ணெய் மற்றும் தயாரித்து வைத்துள்ள கறிவேப்பிலை பொடியில் தேவையான அளவு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
6/6

ஆரோக்கியமான கறிவேப்பிலை சாதம் ரெடி, இதற்கு கோவக்காய், உருளைக்கிழங்கு உள்ளிட்டவற்றை வறுத்து தொட்டு கொண்டு சாப்பிடலாம்.
Published at : 30 May 2024 07:33 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
உலகம்
தேர்தல் 2025
இந்தியா
Advertisement
Advertisement