மேலும் அறிய
Drishyam : ஹாலிவுட்டில் ரீ மேக் செய்யப்படும் முதல் இந்திய படம்..வரலாறு படைக்கும் திரிஷ்யம்!
Drishyam : முதல்முறையாக ஒரு இந்திய படம் ஹாலிவுட்டில் ரீ மேக் செய்யப்படவுள்ளது.
திரிஷ்யம் ஹாலிவுட் ரீ மேக்
1/8

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் 2013ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் 'திரிஷ்யம்'.
2/8

மோகன் லால், மீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
3/8

அதன் வெற்றியை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் வெளியாகி அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
4/8

தமிழில் 'பாபநாசம்' என்ற பெயரில் ரீ மேக் செய்யப்பட்டது. இதில் கமல்ஹாசன், கௌதமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
5/8

மலையாளத்தில் 'திரிஷ்யம்' இரண்டாம் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது மூன்றாம் பாகத்தை தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் வெவ்வேறு முன்னணி நடிகர்களை வைத்து ரீ மேக் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
6/8

இந்நிலையில் 'திரிஷ்யம்' படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை ஹாலிவுட்டில் ரீமேக் செய்யும் உரிமையை பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. கல் ஃப்ஸ்ட்ரீம் நிறுவனத்துடன் இணைந்து ரீமேக் செய்யப்பட உள்ளது.
7/8

ஒரு இந்திய திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.
8/8

கடந்த ஆண்டு இப்படத்தை கொரியன் மொழியில் ரீ மேக் செய்வதற்கான உரிமையை பனோரமா ஸ்டுடியோஸ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 01 Mar 2024 01:10 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
பொது அறிவு
தமிழ்நாடு
ஆட்டோ





















