மேலும் அறிய

Nainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்

மேடையில் நயினார் நாகேந்திரனை வைத்துக் கொண்டு பிரதமர் மோடி மீது அடுக்கடுக்காக குறை சொன்னார் ஸ்டாலின். ஆனால் நயினார் எதுவுமே எதிர்ப்பு சொல்லாமல் சைலண்ட் மோடில் இருந்தது பாஜகவினருக்கு ஷாக்கை கொடுத்துள்ளது. பாஜகவின் கராத்தே தியாகராஜனே நயினாருக்கு எதிராக கடுப்பாகி பேசியுள்ளார். 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருநெல்வேலியில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி ஒன்றில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், “கடந்த 2023 ஆம் ஆண்டு எப்படிப்பட்ட கனமழை பெய்தது என்று எல்லோருக்கும் தெரியும். இந்த கனமழையால் திரு நெல் வேலி , தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் எப்படி பாதிக்கப்பட்டது என்பதும் நமக்கு நன்றாக தெரியும். மத்திய அரசிடம் நிதி கேட்டோம். இடைக்கால நிதியை கூட அவர்கள் கொடுக்கவில்லை” என்ற ஸ்டாலின், “ நயினார் நாகேந்திரன் கோபித்துக்கொள்ள கூடாது. அவருக்கும் உண்மை தெரியும்.ஆனால் அவர் பேசமாட்டார். நீங்கள் பேசுங்கள் என்று தான் எனக்கு அனுமதி கொடுப்பார்” என்று சொன்னார். பிரதமரை குறை சொல்லி பேசியதற்கு நயினார் நாகேந்திரனிடம் இருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை. 

பாஜக சட்டமன்ற உறுப்பினரை மேடையில் வைத்துக்கொண்டே முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு பேசியது பாஜகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கு நயினார் நாகேந்திரன் எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார். நயினார் செய்தது கொஞ்சம் கூட சரியில்லை என பாஜகவினரே போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.  பாஜக மாநில செயலாளர் கரத்தே தியாகராஜனும் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர்,”முதலமைச்சர் ஸ்டாலின் மோடியையும், நிர்மலா சீதாரமனையும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். மேடையில் நயினார் நாகேந்திரனை வைத்துக்கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் இவ்வாறு பேசியுள்ளார். ஆனால் அதற்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை”என்று தனது ஆதங்கத்தை கொட்டினார். 

இதுபற்றி நயினார் நாகேந்திரனிடம் கேட்ட போது,”இதற்குலாம் கருத்து சொல்ல முடியாது. சபை நாகரிகம் என்று ஒன்று இருக்கிறது” என்று நழுவினார்.  சமீப காலமாக நயினார் நாகேந்திரனுக்கும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் பனிப்போர் நடைபெற்று வருகிறது. அடுத்த தலைவர் யார் என்பதிலும் அண்ணாமலை, நயினார் இடையே போட்டா போட்டி நடந்து வருவதாக சொல்கின்றனர். இந்த உட்கட்சி மோதல் தான் தற்போது வெளிப்படையாகவே தெரிய ஆரம்பித்துள்ளதாக விமர்சிக்கப்படுகிறது. அதேபோல் நயினாரை மீண்டும் அதிமுக பக்கமே கொண்டு வருவதற்காக இபிஎஸ் தூது அனுப்பி வருவதாக சொல்கின்றனர். இந்த நேரத்தில் பிரதமரை முதலமைச்சர் ஸ்டாலின் ரவுண்டு கட்டும் போது நயினார் சைலண்ட் மோடில் இருந்தது தமிழக பாஜக மீது அவருக்கு இருக்கும் அதிருப்தியை காட்டுவதாக சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படுகிறது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

எதிர்க்கட்சிகள் புறக்கணிப்புக்கு மத்தியில் எம்பிக்கள் கூட்டம்! டெல்லிக்கு எதிராக முதல்வர் விஜய் எடுத்த முடிவு என்ன?
எதிர்க்கட்சிகள் புறக்கணிப்புக்கு மத்தியில் எம்பிக்கள் கூட்டம்! டெல்லிக்கு எதிராக முதல்வர் விஜய் எடுத்த முடிவு என்ன?
தென் மாவட்ட பயணிகளுக்கு வரப்பிரசாதம்! திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில்கள்!
தென் மாவட்ட பயணிகளுக்கு வரப்பிரசாதம்! திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில்கள்!
பழனி அருகே நெய்க்காரபட்டி ஆடி திருவிழா: தலையில் தேங்காய் உடைக்கும் வினோத நேர்த்திக்கடன்!
பழனி அருகே நெய்க்காரபட்டி ஆடி திருவிழா: தலையில் தேங்காய் உடைக்கும் வினோத நேர்த்திக்கடன்!
China Firm Unhappy Leave: அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?
அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்

Embed widget