WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸப்பில் சாட் தீம் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது பற்றிய விவரங்களை காணலாம்.

வாட்ஸ் அப் புதிய சாட் தீம் (Chat Themes) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. சாட் செட்டிங்கில் மாற்றிக்கொள்ளலாம்.
வாட்ஸ் அப் பயனர்களுக்கு இந்தாண்டில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. பயனர்களின் வசதிக்கு எற்ப, தொழில்நுட்ப வசதிகளை மேம்பத்தும் நோக்கில் மெட்டா பல அப்டேட்டை வழங்கி வருகிறது. மெசேஜ், வாய்ஸ் கால், பணி தொடர்பான விசயங்கள், வீடியோ ஷேரிங், புகைப்படம், ஃபைல்கள் ஷேர் செய்வதற்கு மட்டுமல்லாமல் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைப்பதற்காகவும் வாட்ஸ் அப் பயன்படுத்தப்படுகிறது. வீடியோ கால் வசதிகளில் ஃபில்டர்கள், அதிக MB ஃபைல்களை பகிர்வது, வீடியோ காலில் அதிக நபர்கள் இணையலாம் ஆகிய பல அப்டேட்களை மெட்டா வழங்கியது. ஜூன்,2024 ம் ஆண்டு மெட்டா AI வெளியானது. பண பரிவர்த்தனை செய்வது, பிசினஸ் தேவைகளுக்காக நோட்ஸ், ரிமைன்டர் என பல்வேறு வசதிகளை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியது. இன்னும் பல வசதிகளை வாட்ஸ் அப் உருவாக்கி வருவதாக மெட்டா தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப் செயலியை மெட்டா வாங்கிதற்கு பிறகு, பல்வேறு வசதிகளை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் உள்ளது போல வழங்கி வருகிறது.
வாட்ஸ் அப் ஆடியோ, வீடியோ கால் பயன்படுத்துவம் அதிகரித்துள்ளது. வாட்ஸ் அப் நிறுவனம், தொடர்பு கொள்ள வேண்டிய நபரின் எண்ணை Contant லிஸ்டில் 'Save' செய்யாமலேயே தொடர்பு எண்ணை பயன்படுத்தி கால் செய்ய முடியும். இதன் மூலம் ஒருமுறை மட்டும் தொடர்பு கொள்ள வேண்டிய எண்களை உங்க கான்டெடக்ட்டில் Save செய்ய வேண்டியதில்லை.
“Chat theme”
வாட்ஸ் அப் ஆண்ட்ராய்ட், IOS பயனர்களுக்கு ‘சாட் தீம்; அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் புதிதாக 22 ப்ரீ-செட் தீம்ஸ் (themes) மற்றும் 30 புதிய வால்பேப்பர் (wallpapers) வெளியிடப்பட்டுள்ளது. சாட் வசதிகளில் புதிய வால்பேப்பரை Add செய்துகொள்ளலாம். நீங்கள் யாருக்கு சாட் தீம் மாற்றுகிறீர்களுக்கு அவர்களுக்கு மட்டுமே தெரியும். வாட்ஸ் அப்பில் ஏற்கனவே ‘built-in' தீம்களை கஸ்டமைஸ் செய்துகொள்ளலாம். இதன் ப்ரைட்னஸ் அட்ஜஸ்ட் செய்யலாம். இன்கமிங் மெசேஜஸ் க்ரே அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது லைட் தீம் அல்ல்து டார்க் தீம் பயன்படுத்தினாலும் மாறாது.
வாட்ஸ் அப் சாட் தீம் மாற்றுவது எப்படி?
- வாட்ஸ் அப் செட்டிங்கஸ் செல்ல வேண்டும்/
- அதில். “Chats” என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
- பிறகு, “Default chat theme” என்று வரும். அதில் உங்களுக்குப் பிடித்த தீம் தேர்வு செய்து வைக்கலாம்.
ஃபோட்டோ, வீடியோ ஃபில்டர்:
வீடியோ கால் வசதியில் ஃபில்டர் வசதி கிடைக்கிறது. வாட்ஸ் அப் வீடியோ காலில் Background மாற்றி கொள்ளலாம். ஃபேஸ்புக் மெசெஞ்சர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் வீடியோ கால் பயன்படுத்தும்போது அதன் Background மாற்றிகொள்ள முடியும். அதேபோல வாட்ஸ் அப்பிலும் கிடைக்கிறது. வீடியோ காலில் இனி உங்களுக்குப் பிடித்த எஃபக்ட்கள், background மாற்றிக்கொள்ளலாம். வீடியோ கால் ஸ்க்ரினில் “Magic Wand” ஐகான் புதிதாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க..
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

