Mayiladuthurai Power Shutdown (14.02.2025): மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று இங்கெல்லாம் மின்தடை - இதுல உங்க பகுதி இருக்கா பாருங்க?
Mayiladuthurai Power Shutdown 14.02.2025 : மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று (14.02.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மின் பாதை பராமரிப்பு பணிகள்
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.
மின் நிறுத்தம் செய்யப்பட்டு இடங்கள்
அந்த வகையில் நீடூர் துணை மின் நிலையத்தில் இன்று மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை நீடூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான வில்லியநல்லூர், நடராஜபுரம், மண்ணிப்ள்ளம், மல்லியக்கொல்லை, சேந்தூர், மேலநல்லூர், கொண்டல், பாலக்குடி, அருவாபாடி, கடவங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள். மேற்கண்ட பகுதிகளிலும் மின் வினியோகம் தடை செய்யப்பட்ட உள்ளதாக மயிலாடுதுறை நகர் உதவி செயற்பொறியாளர்கள் கலியபெருமாள் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
மூளைய கழட்டி வச்சு படம் பாக்குறீங்க...பொங்கிய விடாமுயற்சி நடிகை ரெஜினா
மாறுதலுக்கு உட்பட்டது
மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.






















