IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: நடப்பாண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 22ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் ஆர்சிபி - கொல்கத்தா அணிகள் மோதுகிறது.

IPL 2025 Schedule: நடப்பாண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் மாதம் நடக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதும் முதல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்குகிறது. சிஎஸ்கே அணி தனது முதல் போட்டியில் மும்பை அணியுடன் மோதுகிறது. முதல் போட்டியில் பெங்களூர் - கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
முதல் போட்டி எங்கே?
முதல் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மோதுகின்றன.
சென்னை அணி தனது முதல் போட்டியில் வரும் மார்ச் 23ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இதன்பின்பு, போட்டிகள் தொடங்கி வரும் மே 18ம் தேதி வரை லீக் போட்டிகள் நடக்கிறது. கடைசி லீக் போட்டியில் லக்னோ அணியும், சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி மே 18ம் தேதி நடக்கிறது, இந்த போட்டி லக்னோவில் நடக்கிறது.
இறுதிப்போட்டி எப்போது?
மொத்தம் 70 லீக் போட்டிகள் நடந்து முடிந்த பிறகு மே 20ம் தேதி குவாலிபயர் முதல் போட்டி நடக்கிறது. மே 21ம் தேதி எலிமினேட்டர் போட்டி நடக்கிறது. மே 23ம் தேதி குவாலிபயர் 2ம் போட்டி நடக்கிறது. மே 25ம் தேதி ஐபிஎல் மகுடத்தைச் சூடப்போவது யார்? என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப்போட்டி நடக்கிறது.
இறுதிப்போட்டி எங்கே?
குவாலிபயர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் ஹைதராபாத் மைதானத்தில் நடக்கிறது. குவாலிபயர் 2 மற்றும் இறுதிப்போட்டி கொல்கத்தா மைதானத்தில் நடக்கிறது.
சென்னை சூப்பர்கிங்ஸ் அணி சென்னையில் நடக்கும் போட்டிகளில் மும்பை, ஆர்சிபி, டெல்லி, கொல்கத்தா, சன்ரைசர்ஸ், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளை எதிர்கொள்கிறது. இதில் மிகவும் முக்கியமான மும்பை அணிக்கு எதிரான 23ம் தேதியும், ஆர்சிபி-யுடன் மார்ச் 28ம் தேதியும் நடக்கிறது.
அதேபோல, மும்பை - ஆர்சிபி அணிகள் மோதும் போட்டி ஏப்ரல் 7ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

