மேலும் அறிய
Rashmika Mandanna: ’Chhaava ’ திரைப்படம் BTS புகைப்படங்களை வெளியிட்ட ராஷ்மிகா!
Rashmika Mandanna: Chhaava திரைப்படத்தின்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துகொண்ட புகைப்படங்களை ராஷ்மிகா மந்தனா பகிந்துள்ளார்.
ராஷ்மிகா மந்தனா
1/6

மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜி - சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் 'சாவா'. லக்ஸ்மன் உடேகர் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கெளசல் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவாகவும் நடிகை ராஷ்மிகா மந்தனா சம்பாஜியின் மனைவி மகாராணி ஏசுபாய் கதபாத்திரத்திலும நடித்துள்ளனர்.
2/6

ரூ.130 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் பிப்பரவரி,14-ம் தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை பகிந்துள்ளார். சமீபத்திய நிகழ்வில் தன்னை ஐதராபாத்தில் இருந்து வந்தவர் என பேசியது கன்னட சினிமா ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சொந்த ஊரை மறக்க கூடாது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Published at : 15 Feb 2025 04:31 PM (IST)
மேலும் படிக்க





















