Namakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector
திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்
’’ராஜாவாக இருந்தாலும், கூலியாக இருந்தாலும் மயானத்திற்கு சென்றால் ஒரு டம்ளர் சாம்பல் தான்’’, என மாவட்ட ஆட்சியர் கிராம மக்களுக்கு அறிவுரை கூறும் வீடியோ வெளியாகி பாராட்டுகளை பெற்று வருகிறது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆயிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கோப்பம்பட்டி பகுதியில் திருநங்கைகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இந்நிலையில் அங்கு உள்ள கிராம மக்கள் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.நேற்று 10க்கும் மேற்பட்ட திருநங்கைகள் சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சம்பவ இடத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு மேற்கொண்டு கிராம மக்களிடம் மற்றும் திருநங்கைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனைவருக்கும் அரசு நிலம் என்பது சமம் தான் யாரிடம் கருத்து வேறுபாடு இருக்கக் கூடாது என கூறினார்.
அதனை தொடர்ந்து ராஜாவாக இருந்தாலும், கூலியாக இருந்தாலும் மயானத்திற்கு சென்றால் ஒரு டம்ளர் சாம்பல் தான் மக்களிடையே கருத்து வேறுபாடு இருக்கக் கூடாது.
அனைவருக்கும் ஓடுவது சிவப்பு ரத்தம் தான் விழும்பில் இருக்கும் திருநங்கைகளை நம் தான் வாழ்வில் உயர்த்துவதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என கிராம மக்களிடையே பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.





















