MI IPL 2025 full schedule: சிஎஸ்கேவின் பங்காளி, கேப்டனாகும் ரோகித் - மும்பை அணியின் மொத்த போட்டி, மைதான, நேர விவரங்கள்
MI IPL 2025 full schedule: நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடரில் மும்பை அணி விளையாட உள்ள 14 லீக் போட்டிகளின், முழு விவரங்களையும் இந்த தொகுப்பில் அறியலாம்.

MI IPL 2025 full schedule: நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில், ரோகித் சர்மா கேப்டனாகும் சூழல் உருவாகியுள்ளது.
ஐபிஎல் 2025 - மும்பை இந்தியன்ஸ் அணி:
நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான போட்டி அட்டவணையை பிசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி, ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக ஐந்து கோப்பைகளை வென்ற அணி என்ற பெருமையை பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பாண்டிற்கான தனது முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. கடந்த சீசனில் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் களமிறங்கி, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்த நிலையில், இந்த ஆண்டு வலுவான கம்பேக் கொடுக்க தயாராகி வருகிறது. இதற்காக ரோகித் சர்மா, சூர்யகுமார் யாத், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா மற்றும் திலக் வர்மா போன்ற மைய அணியை தக்கவைத்துள்ளதோடு, ஏலத்தில் தீபக் சாஹர் , ரியான் ரிக்கல்டன் மற்றும் மிட்செல் சாண்ட்னர் போன்ற வீரர்களை எடுத்து அணியை வலுவாக கட்டமைத்துள்ளது. இந்நிலையில் மும்பை அணி விளையாட உள்ள, லீக் போட்டியின் மொத்த விவரங்களையும் இந்த தொகுப்பில் அறியலாம்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் போட்டி விவரங்கள்:
- சென்னை vs மும்பை - 7:30 PM IST - மார்ச் 23 - MA சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை
- குஜராத் vs மும்பை - 7:30 PM IST - மார்ச் 29 - நரேந்திர மோடி ஸ்டேடியம், அகமதாபாத்
- மும்பை vs கொல்கத்தா - 7:30 PM IST - மார்ச் 31 - வான்கடே ஸ்டேடியம், மும்பை
- லக்னோ vs மும்பை - இரவு 7:30 IST - ஏப்ரல் 4 - ஏகானா ஸ்டேடியம், லக்னோ
- மும்பை vs பெங்களூர் - 7:30 PM IST - ஏப்ரல் 7 - வான்கடே ஸ்டேடியம், மும்பை
- டெல்லி vs மும்பை - 7:30 PM IST - ஏப்ரல் 13 - அருண் ஜெட்லி ஸ்டேடியம், டெல்லி
- மும்பை vs ஐதராபாத் - 7:30 PM IST - ஏப்ரல் 17 - வான்கடே ஸ்டேடியம், மும்பை
- மும்பை vs சென்னை - 7:30 PM IST - ஏப்ரல் 20 - வான்கடே ஸ்டேடியம், மும்பை
- ஐதராபாத் vs மும்பை - 7:30 PM IST - ஏப்ரல் 23 - உப்பல் ஸ்டேடியம், ஹைதராபாத்
- மும்பை vs லக்னோ - 3:30 PM IST - ஏப்ரல் 27 - வான்கடே ஸ்டேடியம், மும்பை
- ராஜஸ்தான் vs மும்பை - 7:30 PM IST - மே 1 - சவாய் மான்சிங் ஸ்டேடியம், ஜெய்ப்பூர்
- மும்பை vs குஜராத் - 3:30 PM IST - மே 6 - வான்கடே ஸ்டேடியம், மும்பை
- பஞ்சாப் vs மும்பை - 3:30 PM IST - மே 11 - மகாராஜா யாதவீந்திர சிங் கிரிக்கெட் ஸ்டேடியம், முல்லன்பூர்
- மும்பை vs மும்பை - 7:30 PM IST - மே 15 - வான்கடே ஸ்டேடியம், மும்பை
சென்னை அணிக்கு எதிராக கேப்டனாகும் ரோகித் சர்மா?
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கடைசி போட்டியின் போது, பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்த சீசனில் மூன்றாவது முறையாக பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதால், மும்பை அணி கேப்டன் ஹர்திக்கிற்கு 30 லட்ச ரூபாய் அபராதம் மற்றும் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. அதன்படி, நடப்பாண்டு சீசனின் முதல் போட்டியில், ஹர்திக் பாண்ட்யா விளையாட வாய்ப்பில்லை. எனவே, சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா மீண்டும் மும்பை அணியை வழிநடத்தக் கூடும். ஆனால், அவர் அந்த வாய்ப்பை ஏற்பாரா? அல்லது சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தும் சூர்யகுமார் யாதவிற்கு வாய்ப்பளிப்பாரா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
மும்பை அணியின் வீரர்கள் விவரங்கள்:
ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரோகித் ஷர்மா, திலக் வர்மா, டிரென்ட் போல்ட், நமன் திர், ராபின் மின்ஸ், கரன் ஷர்மா ரியான் ரிக்கல்டன், தீபக் சாஹர், அல்லா கசன்ஃபர், வில் ஜாக்ஸ், அஷ்வனி குமார், மிட்செல் சான்ட்னர், ரீஸ் டோப்லே, கிருஷ்ணன் ஸ்ரீஜித், ராஜ் அங்கட் பவா, சத்யநாராயண ராஜு, பெவான் ஜேக்கப்ஸ், அர்ஜுன் டெண்டுல்கர், லிசாட் வில்லியம்ஸ், விக்னேஷ் புதூர்




















