மேலும் அறிய
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
Delhi Railway Station Stampede: புதுடெல்லி ரயில் நிலையத்தில் ரயிலில் பயணிக்க வேண்டி திரண்ட காரணத்தால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 18 உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசல்
1/7

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை , மகா கும்பமேளா பிரமாண்டமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆன்மீக கொண்டாட்ட நிகழ்வில் துறவிகள், ஆண்கள் , பெண்கள், குழந்தைகள், பண்டிதர்கள் மற்றும் பலர் குவிகின்றனர். கடந்த ஜனவரி 13 ஆம் தேதி, பிரயாக்ராஜில் தொடங்கிய மகா கும்பமேளா, பிப்ரவரி 26 புதன்கிழமை வரை தொடர்ந்து நடைபெறும்.டெல்லி ரயில் நிலையத்தில், கடந்த சனிக்கிழமை இரவு ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 18 பேர் உயிரிழந்ததாக சோகமான நிகழ்வானது நிகழ்ந்திருக்கிறது.
2/7

"ஸ்வதந்த்ரா சேனானி எக்ஸ்பிரஸ் மற்றும் புவனேஷ்வர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் தாமதமாக வந்ததால் ரயில் நிலையத்தில் ஏற்கனவே கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த இரண்டு ரயில்களின் பயணிகளும் 13 மற்றும் 14 நடைமேடைகளில் இருந்தனர். ஒவ்வொரு மணி நேரத்துக்கும் கூடுதலாக 1,500 பொது டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதால், ஸ்டேஷனில் கூட்ட நெரிசல் அதிகமாகி, கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருந்தது." என அதிகாரி தெரிவித்தார்.
3/7

உத்தர பிரதேசம் பிரயாக்ராஜ்-ல் நடந்து வரும் மகா கும்பமேளாவில் பங்கேற்பதற்காக, அதிக மக்கள் ரயில்களுக்காக மக்கள் காத்திருந்ததால், புது தில்லி ரயில் நிலையம் சனிக்கிழமை பெரும் கூட்டத்தைக் கண்டது.
4/7

பிரயாக்ராஜ் ஸ்பெஷல் ரயில் பிளாட்ஃபார்ம் 16க்கு வந்து கொண்டிருண்திருக்கிறது. அப்போது, பிளாட்பார்ம் 16ல் பிரயாக்ராஜ் ஸ்பெஷல் ரயில் வந்து கொண்டிருக்கிறது என அறிவிப்பு வெளியாகியது
5/7

அப்போது பிளாட்ஃபார்ம் 14ல் பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் குழப்பம் அடைந்து, பிளாட்ஃபார்ம் 16க்கு வந்துவிட்டனர். இதனால், கூட்டம் அதிகமாகி நெரிசல் ஏற்பட்டது என காவல்துறையினர் தெரிவித்தனர்.
6/7

பிரயாக்ராஜுக்குச் செல்லும் இரண்டு ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் 13 மற்றும் 14-வது நடைமேடைகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது என டெல்லி தீயணைப்பு துறையின் தலைவர் அதுல் கார்க் கூறியுள்ளார்.
7/7

பிரயாக்ராஜ் செல்லும் இரண்டு ரயில்களின் பெயர்களில் ஏற்பட்ட குழப்பம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. அதாவது , பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் மற்றும் பிரயாக்ராஜ் ஸ்பெஷல் ரயில்களின் பெயர்களால் குழப்பம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
Published at : 16 Feb 2025 09:11 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
வணிகம்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion