"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
தமிழ்நாட்டில் இருந்து வரி தர முடியாது என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டிய நிதியை ஒதுக்க முடியாது என்று கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
வரி தர முடியாது:
நான் என் மாநிலத்தில் இருந்து உனக்கு வரி வருவாய் தர முடியாதுனு ஒரு தீர்மானத்தைப் போட வேண்டும். வெள்ளைக்காரன் காலத்தில்தான் நாம் வரி கொடா இயக்கம் நடத்த முடியுமா? இந்த கொள்ளைக்கார ஆட்சியில் நடத்த முடியாதா? இது கொள்ளை தானே?
என் வரியை எடுத்துட்டு போயிட்டு எனக்குத் தர முடியாதுனு சொல்றது கொள்ளைதானே. உனக்கு எப்படி இந்த அதிகாரத்திமிர் வந்தது? உன்னோட ஆட்சி அதிகாரம் என் மீது இப்படி அத்துமீறி செய்யும்னா என்னோட அதிகாரம் வேடிக்கை பாக்குமா? ஐயா. சாமி நீங்க என்ன சொன்னாலும் கேக்குறேன் அதுக்கா.
8 கோடி மக்களின் உரிமைப் பிரச்சினை:
இது 8 கோடி மக்களின்:உரிமைப் பிரச்சினை. தன்மானப் பிரச்சினை. இனமானப் பிரச்சினை. இதை இங்க இருக்குற ஆட்சியாளர்கள் செய்ய மறுத்துட்டு, என்ன செய்ய? இதைத் தர மறுக்குறாங்கனு? புலம்பிகிட்டு இருக்காங்க. புலம்பிகிட்டு இருக்குறதுக்கு ஒரு அதிகாரம். அதுக்கு 40 பாராளுமன்ற உறுப்பினர்கள். இது கேவலம்.
பெரிய மாநாடு நடத்துவோம். பேரணி நடத்துவோம். கர்நாடகாவில் எந்தவொரு பொது பிரச்சினைனாலும் கொடியை கீழே போட்ருவான். அவன் மாநிலக்கொடியை தூக்கிடுவான். பொதுவா நிப்போம். எல்லாரும் நிப்போம். ஒரு ரூபாய் வரி கூட இந்திய அரசுக்கு தர மாட்டேனு சொல்லுவோம். ஏன் முடியாதுனு கேளுங்க.
இந்த மாதிரி ஒரு தீர்மானத்தைப் போட்டாலே அவர் வீட்டில் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை எல்லாரும் வந்துரும். கை பூரா கறை. என்கிட்ட ஒன்னுமில்ல. காமராஜர் இருக்கும்போது இப்படி ஒரு வேலையை நீங்க காட்டி இருப்பீங்களா?
அதிகாரம் துணை:
மயிலாடுதுறை இரட்டைப் படுகொலை விவகாரத்தில் ஒரு குற்றத்தை தடுப்பதற்கு பதிலாக ஒரு குற்றத்தை மறைக்கவே இந்த அரசு போராடுகிறது. அது அண்ணா பல்கலைக்கழக பாலியல் சீண்டலில் இருந்து அனைத்து இடங்களிலும் அதைத் தலையிடுவது இல்லை. பல முறை சிறைக்குப் போக கள்ளச்சாரயம் விற்க, சிறைக்குப் போக வர கள்ளச்சாரயம் விற்க அதிகாரம் அதுக்கு துணையா நிற்குதுனு தானே அர்த்தம். இரண்டு வளர்ற புள்ளைங்களை படிக்குறப் புள்ளைங்களை வெட்டிக் கொலை பண்ணிருக்கானே அது எவ்வளவு தூரம்னு பாருங்க? அந்த பெற்றோருக்கு உரிய இழப்பீடு கொடுக்கம்னு.
இப்போ கள்ளக்குறிச்சி அதுக்கு முன்னாடி மரக்காணத்த்துல பாத்தீங்க. இப்போ மயிலாடுதுறையில நடக்குது. வெளியில வந்தாதான் அது குற்றமா தெரியுது. இதற்கு அரசு பொறுப்பேற்று உடனடியாக இதுபோன்று குற்றங்களைத் தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

