மேலும் அறிய

மக்களுக்கு பிரச்சனையா?; ஓடோடி வந்த தமிழக வெற்றி கழகம் - சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக மனு எழுதித் தருவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த தமிழக வெற்றி கழகத்தினர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதில் சேலம் மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு குறைகளை பொதுமக்கள் மனுக்களாக எழுதி மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து வருகின்றனர். பின்னர் பொதுமக்கள் கொடுக்கப்பட்ட மனு உரிய அதிகாரிகளிடம் வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனைப் பெற்றுக் கொண்டு உடனடியாக மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து அதற்கான தீர்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மக்களுக்கு பிரச்சனையா?; ஓடோடி வந்த தமிழக வெற்றி கழகம் - சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

இந்த நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களிடம் மனு எழுதித் தருவதாக அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இதனை அறிந்த தமிழக வெற்றிக் கழகத்தின் மாநகர மாவட்ட செயலாளர் பார்த்திபன், தமிழக வெற்றி கழக நிர்வாகிகளுடன் சேர் உள்ளிட்ட பொருட்களை எடுத்து வந்து பொது மக்களுக்கு இலவசமாக தாங்கள் மனு எழுதி கொடுக்கப் போகிறோம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை புரிந்தனர். இதனை அறிந்த சேலம் நகர காவல் துறையினர் உடனடியாக பொதுமக்களுக்கு மனு எழுதித் தருவதற்கு இலவசமாக அரசே ஏற்பாடு செய்து தருவதாக கூறி இருக்கின்றனர். இதனால் தாங்கள் திரும்பிச் செல்ல வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். அரசே மனு எழுதிக் கொடுப்பதாக இருந்தால் தாங்கள் திரும்பி செல்கிறோம் என தெரிவித்து திரும்பி சென்றனர்.

தமிழக வெற்றி கழகத்தினர் வருகை புரிந்ததை தொடர்ந்து அவசர அவசரமாக அரசு அதிகாரிகள் மனு எழுதுவதற்கு தற்காலிகமாக ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது. பொதுமக்களுக்கு மனு எழுதித் தருவதற்கு அதிகளவு கட்டணம் வசூலிப்பதை அறிந்த தமிழக வெற்றி கழகத்தினர் இலவசமாக தாங்கள் எழுதித் தருவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மக்களுக்கு பிரச்சனையா?; ஓடோடி வந்த தமிழக வெற்றி கழகம் - சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

இதுகுறித்து தமிழக வெற்றி கழகத்தின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் பார்த்திபனிடம் கேட்டபோது, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம்தோறும் திங்கட்கிழமை நாட்களில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு ஒரு பொது மக்கள் மனுவை அதிக விலை கொடுத்து எழுதி வருவதாக எனது கவனத்திற்கு வந்தது. இதன் காரணமாக மக்கள் சிரமம் இன்றி இலவசமாக மனுவை எழுதி தருவதற்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் ஏற்பாடு செய்ய திட்டமிட்டும். அதன்படி, இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இலவச மனு எழுதி தருவதற்கு ஏற்பாடு செய்தோம். ஆனால் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் சார்பில் கட்டணம் இன்றி பொதுமக்களுக்கு மனு எழுதித் தருவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தனர். இதனையடுத்து நாங்கள் கலைந்து செல்கிறோம். பொதுமக்களுக்கு கட்டணம் இன்றி மனு எழுதுவதை மாவட்ட நிர்வாகம் நிறுத்தினால் உடனடியாக தமிழக வெற்றி கழகம் சார்பில் மீண்டும் இலவச மனு எழுதி தரப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
PhD Scholarship: பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை! வெளியான அறிவிப்பு- உடனே விண்ணப்பிங்க!
PhD Scholarship: பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை! வெளியான அறிவிப்பு- உடனே விண்ணப்பிங்க!
India Germany Visa: அப்பாடா, இனி பிரச்னையே இல்ல.! இந்தியர்களுக்கு இனிப்பான அறிவிப்பை வெளியிட்ட ஜெர்மனி; அது என்ன.?
அப்பாடா, இனி பிரச்னையே இல்ல.! இந்தியர்களுக்கு இனிப்பான அறிவிப்பை வெளியிட்ட ஜெர்மனி; அது என்ன.?
Teachers Strike: நெருங்கும் பொங்கல்; வெளியாகுமா அறிவிப்பு? ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படுமா? எதிர்பார்ப்பில் ஆசிரியர் கூட்டணி!
Teachers Strike: நெருங்கும் பொங்கல்; வெளியாகுமா அறிவிப்பு? ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படுமா? எதிர்பார்ப்பில் ஆசிரியர் கூட்டணி!
ABP Premium

வீடியோ

H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”
ஆட்சியில் பங்கு பஞ்சாயத்து! தமிழ்நாடு வரும் ராகுல்! நிர்வாகிகளுடன் MEETING
Vijay in CBI Office | டெல்லி சென்ற விஜய் திக்திக் CBI விசாரணை உச்சக்கட்ட பரபரப்பில் தவெகவினர் | TVK | Karur Stampede
Annamalai 2026 election | அரவக்குறிச்சிக்கு NO! தொகுதி மாறும் அண்ணாமலை? பாஜகவின் கொங்கு கணக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
PhD Scholarship: பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை! வெளியான அறிவிப்பு- உடனே விண்ணப்பிங்க!
PhD Scholarship: பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை! வெளியான அறிவிப்பு- உடனே விண்ணப்பிங்க!
India Germany Visa: அப்பாடா, இனி பிரச்னையே இல்ல.! இந்தியர்களுக்கு இனிப்பான அறிவிப்பை வெளியிட்ட ஜெர்மனி; அது என்ன.?
அப்பாடா, இனி பிரச்னையே இல்ல.! இந்தியர்களுக்கு இனிப்பான அறிவிப்பை வெளியிட்ட ஜெர்மனி; அது என்ன.?
Teachers Strike: நெருங்கும் பொங்கல்; வெளியாகுமா அறிவிப்பு? ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படுமா? எதிர்பார்ப்பில் ஆசிரியர் கூட்டணி!
Teachers Strike: நெருங்கும் பொங்கல்; வெளியாகுமா அறிவிப்பு? ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படுமா? எதிர்பார்ப்பில் ஆசிரியர் கூட்டணி!
iPhone 17e Leaked Details: வருகிறது ஆப்பிளின் குறைந்த விலை ஐபோன் 17e; கசிந்த வெளியீட்டு தேதி மற்றும் அம்சங்கள் இதோ
வருகிறது ஆப்பிளின் குறைந்த விலை ஐபோன் 17e; கசிந்த வெளியீட்டு தேதி மற்றும் அம்சங்கள் இதோ
Toyota Urban Cruiser Hyryder SUV: விற்பனையில் அடித்துத் தூக்கும் டொயோட்டா ஹைரைடர்; ஹைப்ரிட் SUV-ன் விலை அம்சங்கள் என்ன.?
விற்பனையில் அடித்துத் தூக்கும் டொயோட்டா ஹைரைடர்; ஹைப்ரிட் SUV-ன் விலை அம்சங்கள் என்ன.?
Teachers Protest: போராடும் ஆசிரியர்கள் மீது கஞ்சா வழக்கு; மிரட்டிய போலீஸ்- வைரலாகும் ஆடியோ! அராஜகத்தின் உச்சம்!
Teachers Protest: போராடும் ஆசிரியர்கள் மீது கஞ்சா வழக்கு; மிரட்டிய போலீஸ்- வைரலாகும் ஆடியோ! அராஜகத்தின் உச்சம்!
Tata Punch Facelift: சுட்டிப்பையன் அப்க்ரேடாகி வந்துட்டான்..! பஞ்ச் விலையில் ஆஃபர் - புது பவர்ட்ரெயின் ஆப்ஷன்
Tata Punch Facelift: சுட்டிப்பையன் அப்க்ரேடாகி வந்துட்டான்..! பஞ்ச் விலையில் ஆஃபர் - புது பவர்ட்ரெயின் ஆப்ஷன்
Embed widget